பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய ஏற்பாட்டில் உள்ள சிம்சோன் வரலாறு 27 26 சிம்சோன் தனக்குக் கைலாகு கொடுத்து நடத்துகிற பிள்ளையாண்டாளுேடே, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப் பார்க்கட்டும் என்ருன். 27 அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந் திருந்தது: அங்கே பெலிஸ்தரின் சகல பிரபுக்களும், வீட்டின் மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை”காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந் தார்கள். 28 அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப் பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண் களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழி வாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னே நினைத் தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி, 29 சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத் தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையிலுைம், மற் ருென்றைத் தன் இடதுகையிலுைம் பிடித்துக்கொண்டு, 30 என் சீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ் விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனுல் கொல்லப் பட்டவர்களைப் பார்க்கிலும், அவன் சாகும்போது அவளுல் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள். 31 பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டா ரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோரா வுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவன் தகப்பணுகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணிஞர்கள். அவன் இசரவேலே இருபது வருடம் நியாயம் விசாரித்தான்.