பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மாமல்லன் சிம்சோன் குப் பல்பிடுங்கப்பட்டது எ ன் ற போது ம் அது முழுக் குடியாட்சிப் பு ர ட் சி யா க உருவெடுக்கவில்லை. ஆனல், அன்றையக் காலகட்டத்தில் அது மிக முற்போக்கானதொரு புரட்சியாக விளங்கியது. அரசியல், சமூகம், பொருளா தாரம், சமயம் ஆகிய துறைகளில் அது பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. இந்தப் பின்னணியில்தான் நாம் மில்ட்டனைப் பார்க்க வேண்டும். மில்ட்டன் 1608ஆம் ஆண்டில் பிறந்தார். அவர் தம் தந்தை கத்தோலிக்கத்திலிருந்து நீங்கி புரோட்டஸ் தனியத்தைத் தழுவியதால் அவர்க்குக் குடும்பச் சொத்தைத் தர மில்ட்டனின் தாத்தா மறுத்தார். இத்தகைய தந்தைக்கு ஏற்ற மகனாகவே மில்ட்டன் விளங்கினர். சிறு வயதிலிருந்தே மில்ட்டன் ப டி ப் பி ல் ஆ | வ ம் செலுத்துவாராயினர். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் அவர் முதுகலைப்பட்டம் பெற்ருர். ஆங்கிலத்தைத் தவிர கிரேக்கம், எபிரேயம், இலத்தீன், பிரெஞ்சு, இத்தாலியம், இசுபானியம் ஆகிய மொழிகளில் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்று விளங்கினர். சமயத்துறையிலும் எழுத்துத்துறையிலும் ஈடுபடுவதற்குரிய ஏந்துகளை அவர்தம் தந்தை ஏற்படுத்திக் கொடுத்தார். சிறு வயதிலிருந்தே கவிதைகள் பலவற்றை அவர் எழுதி வரலானர். அவருடைய பின்னளைய கவிதை மலர்ச்சிக்குரிய வித் து க ள் அ வ ற் றி ல் தென்படுகின்றனவெனினும் இங்கிலாந்துப் புரட்சிக்குப் பிறகு அவர் எழுதிய படைப்பு களே இன்று விதந்தோதப்படுகின்றன. 1630-களின் பிற்பகுதி யில் அவர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற் கொண்டார். பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார். புகழ் பெற்ற வானவியலாளரான கலீலியோவையும் சந்தித்தார். அன்றைய ஐரோப்பிய அறிவுலகத்தோடு அவர்க்கு அறிமுகம் ஏற்பட்டது. இச் சமயத்தில்தான் மில்ட்டனின் வாழ்வையும் இலக்கியத்தையும் சமைக்கவிருந்த இங்கிலாந்துப் புரட்சி வெடிப்பதற்குரிய அறிகுறிகள் புலப்படத் தொடங்கின. செய்தியறிந்ததும் தம் பயணத்தை முடித்துக் கொண்டு மில்ட்டன் தாயகம் திரும்ப முற்பட்டார். இது குறித்துப் பின்ளிைல் அவர் எழுதியதாவது: