பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டனின் படைப்புகள்: வரலாற்றுப் பின்னணி 35 என்று நிறுவினர். நாடாளுமன்றம் இதற்கு வழிவகுக்க வேண்டும் என்று விரும்பினர். முன்னர் குறித்தவாறு, இங்கிலாந்துப் புரட்சியை முன்னின்று நடத்திய நாடாளுமன்றத்தினரோடு மில்ட்டன் இணைந்து நின்ருர். நாடாளுமன்றத்தைப் பற்றியும், புது இராணுவத்துக்குத் தலைமையேற்ற தளபதிகளான ஆலிவர் கிராம்வெல், ஃபேர்ஃபாக்சு ஆகியோரைப் பற்றியும் தனித் தனியே கவிதை எழுதினர். இதோடு நில்லாமல், முதலாம் சார்லசு மன்னன் விசாரிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டதை யொட்டிப் புகழ்மிக்கதொரு நூலை மில்ட்டன் எழுதினர். அரசனும் நீதிபதிகளும் மக்களின் பிரதிநிதிகளே என்றும், அரசாங்கம் என்பது பொதுமக்களின் நலனைக் காக்கும் அறக் கட்டளையாகவே இயங்கவேண்டும் என்றும், இதற்கெதிரான கருத்துகளெல்லாம் மனிதனின் தன்மானத்துக்கு எதிரான துரோகமே என்றும் முழங்கினர். கொடுங்கோலரைத் தீர்த்துக்கட்டுவது இறைவனுக்கும் உவப்பானதே என்றும் காட்டினர். சார்லசு மன்னன் தலையிழந்த சமயத்தில் வேத்தியலார் ஒரு சூழ்ச்சி செய்தனர். மன்னனின் பெயரில் வேத்தியல் படிவம் (Eikon Basilike) என்ருெரு நூலைப் பரப்பினர். மன்னனென்பான் தெய்வாம்சம் பொருந்தியவன் என்பது போன்ற பத்தாம்பசலிக் கொள்கைகளை உணர்ச்சி அழுத்தம் மிகும் வகையில் அந்நூல் எடுத்துக்கூறி, வேத்தியலார்க்கு ஆதரவு திரட்டியது. திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே' என்றும், பாதத்துளி பட்டதும் நோய் விலகும், வீடுபேறு கிட்டும்’ என்றும் காலங்காலமாக நம்பிவந்த பொதுமக்களின் மனங்களை இந்நூல் கொள்ளை கொண்டது. கருத்தியல் நிலையில் இ த னை முறியடிக்க வேண்டிய கட்டாயம் நாடாளுமன்றத்தினர்க்கு ஏற்பட்டது. மில்ட்டன் எழுதுகோலே எடுத்தார். படிவத்தை உடைப் போன்’ (Bikonoklastes) என்ற பெயர்கொண்ட நூலை