பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 , மாமல்லன் சிம்சோன் எழுதினர். மன்னனுக்கும் முடியாட்சிக்கும் ஆதரவான வாதங்களைத் தவிடுபொடி ஆக்கினர். இதனையடுத்து, வேத்தியலார் ஐரோப்பாவின் தலை சிறந்த அறிஞராக மதிக்கப்பெற்ற சால்மாசியசு என்பாரைக் கொண்டு சார்லசு மன்னனுக்கும் முடியாட்சிக்கும் ஆதரவாக எழுதவைத்தனர். அக் காலத்தில் மில்ட்டன் அதிகம் புகழ் வாய்ந்தவராகத் திகழவில்லை. இங்கிலாந்துக்கு வெளியே அவர் பெயரை அறிந்தோர் மிகச் சிலரே. ஆளுல் இங்கி லாந்து மக்களுக்கு ஆதரவாக மில்ட்டன் எழுதிய மறுப்புரை சால்மாசியசின் நூலே ஒன்றுமில்லை என்ருக்கிவிட்டது. கோலியாத்தைத் தாவீது வீழ்த்திவிட்டான் என்று அனே வரும் ஏற்றுக்கொண்டனர். சொல்லப்போனல், இங்கி லாந்தின் பொது அரசமைப்புக்கு அயல்நாடுகளில் மதிப்பு உயர்வதற்குக் காரணம் கிராம்வெல்லின் போர் வெற்றி களும், மில்ட்டனின் படைப்புகளும்தாம் எனக் கூறப் Աւ-t-6ծI . 1649இல் அயல்மொழித் துறைச் செயலாளர் பொறுப்பு மில்ட்டனுக்கு வழங்க ப் பட்டது. அயல்நாடுகளோடு கொள்ளும் வெளியுறவுகளைப் பேணுவதற்காகச் செய்யப் பட்ட கடிதப் பரிமாற்றங்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புமிக்க பணியை மில்ட்டன் மேற்கொண்டார். தமது பன்மொழிப் புலமையை இங்கிலாந்துப் புரட்சியை நிலைநிறுத்துவதற்கெனப் பயன்படுத்தினர். இந்தப் பொறுப்புமிக்க பணியின்போதும், சால் மாசிய கக்கு மறுப்புரை எழுதியபோதும் மில்ட்டனின் கண்கள் தொல்லை தந்துவந்தன. கண்வலி மிகுந்தது. மேற்குறித்த வேலைகளில் ஈடுபடுவதால் கண்கள் மேலும் பாதிக்கப்படடுப் பார்வையை முழுவதும் இழக்க நேரிடும் என்று மருத்துவர் அறிவுறுத்திய போதும் மில்ட்டன் பொருட்படுத்தவில்லை: கருமமே கண்ணுயிருந்து தம் கடமையைச் செவ்வனே செய்து முடித்தார். இதன் விளைவாகத் தம் பார்வையை முழுதும் இழந்தார். இதைப் பற்றிப் பின்னாளில் அவர்தம் நண்பர்க்குக் கீழ்க்காணும் பாடலை எழுதினர்: