பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டனின் படைப்புகள்: வரலாற்றுப் பின்னணி 37 பார்வைக்குக் களங்கமின்றித் தெளிவாகத் தோன்றும் பார்க்கும் என் இருவிழியும் மூன்ருண்டு காலம் பார்வைஇழந் தொளிகாண மறந்துளவே தோழ! பார்க்கும் விழிவட்டத்தில் பகலறியேன், நிலவோ பரிதியோ, விண்மீனே ஆளுே பெண் எவையும் பார்த்தறியேன்; இருப்பினும் நான் இறையாணை மறுக்கேன் எதிர்த்தெண்ஞ்ேறன்; பொறுமையொடு முன்ளுேக்கிச் செல்வேன் எவ்வலுவில் இப்படி நீ இருக்கின்ருய் என்பாய், விடுதலையைக் காக்கின்ற விழுமியதோர் தொண்டில் விழிகளினைத் தொலைத்தேன்.என் றெண்ணுந் தெளிவுண்டே அடுத்தடுத்து ஐரோப்பா இதுபேசும் அறிவேன் உலகத்தின் வெறுமைமிகு புனைவேடக் கூத்தில் நலந்தரு இவ்எண்ணம்என வழிநடத்திச் செல்லும். ஆனல் மில்ட்டன் எந்த விழுமிய பணிக்காகத் தம் உழைப்பையும் சிந்தனையையும் விழியையும் நல்கினரோ அது நாளுக்கு நாள் தேய்ந்தும் சீரழிந்தும் வந்தது. இத் தேய் வைத் தனிமனிதர் சிலரின் வீழ்ச்சியாக அவர் கண்டாரே யன்றிக் கொண்ட கொள்கையின்-வைத்த இ லக் கி ன்தோல்வியாகக் காணவில்லை. வேட்கையும் பேராசை’யுமே இதற்குக் காரணம் என்று வெளிப்படையாகவே கூறிஞர். ஆனல் வீழ்ச்சியைத் தனியொரு ம னி த ன் தடுத்து நிறுத்திவிட முடியுமா? முந்தைய நிலைக்குச் சூழல்கள் மாறி வந்தன. நாட்டுக்கென ைம ய த் திருச்சபை மீண்டும் அமைக்கப்பட்டது; இ ர ண் டா ம் பாதுகாப்பரசுக்கும் முடியாட்சிக்கும் இடையே எந்த வேறுபாடும் தெரியவில்லை. 1658இல் கிராம்வெல் மறைந்தார். அவருடைய இரங் கல் ஊர்வலத்தில் மில்ட்டனும் கலந்துகொண்டார். கிராம் வெல்லின் மறைவோடு பழைய மன்னராட்சி திரும்புவதற்கு இருந்த சிறு தடையும் நீங்கியது. நாடாளுமன்றத்தினர் சார்லசு மன்னைேடு சமரசம் காண முற்பட்டனர். இப் போக்கை எதிர்த்து வீழ்த்தும் முகமாகப் பொது அரசமைப் பைச் சிறிது நெகிழ்த்த விரும்பினர் மில்ட்டன். பொது