பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ህ மாமல்லன் சிம்சோன் இல்லை. இறைவனின் இலட்சியமான புரட்சி ஏன் தோல்வி யடைந்தது என்பதை இறைவனின் மக்களுக்கு விளக்க வேண்டும்; அதன்மூலம் இறைவனின் பணிக்கு மீண்டும் அவர்களைத் திரட்டவேண்டும். இதுதான் 'சுவர்க்க நீக்க”த் தின் சாரம். "யாருடைய தவறு?’ என இறைவன் வினவுகிரு.ர். 'உம்முடையதுதானே! ம னி த ர் க ள் தாமே கலகம் புரிந்தனர். கட்டற்றவர்களாக அவர்களை நான் உருவாக்கி னேன். அவர்கள் தாமாகவே வீழ்ந்து, அடிமைப்படும் வரை சுதந்தரமாகவே இருக்கக்கடவர்." தோல்வியையும் வீழ்ச்சியையும் ம ட் டு ம் மில்ட்டன் வலியுறுத்தவில்லை. நம்பிக்கையைப் பூண்டோடு அழித்து விடவுமில்லை. வீழ்ச்சியிலிருந்து புதிதாய்ப் பிறப்பதறகுச் "கவர்க்க மீட்சி வழி சொல்கிறது. தேவமைந்தர் சாத்தா னின் ஆசையூட்டல்களைப் பொருட்படுத்தாமல் அவற்றை வெற்றி கொள்கிரு.ர். இசுரவேலை மீட்பதற்குச் சாத்தானின் குறுக்கு வழிகளைப் பின்பற்ற மறுக்கிருர். தெய்வீகச் செயல் பாடுகளையும் அவர் வேண்டவில்லை. ஆதாமும் ஏவாளும் தேவர்களாக மாறுவதற்குக் குறுக்கு வழியில் செல்ல முயன்று வீழ்கிருர்கள். ஆனால், தேவமைந்தரோ மனித ராகவே நின்று, செம்மாந்தளுக மாறி வெற்றி பெறுகிரு.ர். இறைவல்ை தேர்ந்தெடுக்கப்பட்ட இங்கிலாந்து மக்களுக்கு மில்ட்டன் உணர்த்தும் பாடம் இதுதான்: பேராசையும் வேட்கையும் கூடா. இ ைற வ னி ன் பேரரசை அமைக்கக் குறுக்கு வழிகள் இல்லை. ஆசையூட்டல்களுக்கு ஏமாந்து விடக்கூடாது. மாமல்லன் சிம்சோன்’ மில்ட்டனின் இறுதிப் படைப் பாக்கம். மில்ட்டனின் வாழ்க்கையோடும் இங்கிலாந்துப் புரட்சியோடும் இந்நூல் பிணைந்து நிற்கின்றது. மில்ட்ட னைப் போலவே சிம்சோனும் தன் நாட்டை விடுவிக்க நினைக் கிருன். வஞ்சிப்பதில் தி லீ யா ளு க் கு எவ்வகையிலும் சோடை போகாதவள் மில்ட்டனின் மனைவி. தம் நாட்டை மீட்கும் முயற்சியில் மில்ட்டன், சிம்சோன் இருவரும்