பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலம் இரவும் பகலும் துய்க்கலாம் என்று நினைத்தேன். அதன் பின் நீங்கள் என் அடிமையாய், நீங்கள் வெறுக்கின்ற பெலித்தியர்களின் அடிமையாய் இல்லாமல், எனது அன்பின் அடிமையாய் வாழ்வீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் என் விலைமதியா உடைமை. தொலைவிடங்களுக்குச் சென்று தொல்லையான பணிகளில் உங்களைத் தோயச் செய்து உங்களை நான் இழக்க விரும்பவில்லை. வீட்டிலேயே உங்களை வைத்துக் கொள்வதின்மூலம் நான் பிரிவுத் துன்பமோ அச்சமோ இன்றி இருக்கலாம் என்று எண்ணினேன் (பக். 76). ஆனல் சிம்சோனின் வைரம்பாய்ந்த நெஞ்சில் நிறைந்து நின்ற குறிக்கோள் அவனை எங்ங்னம் நிலைபிறழா வண்ணம் நிற்கச் செய்கிறது எ ன் ப த னை அழகுற எடுத்துக்காட்டுகிருர் கவியரசர் மில்ட்டன்: அரேபியக் காடுகளிலே தங்களையே எரித்துக்கொண்டு சாம்பலாகிவிடுகின்ற தீப் பறவைகள் (போனிக்க), சாம்பலிலிருந்து மீண்டும் இளமையோடு உயிர்த் தெழுவதைப்போன்று ம ைற ந் த சிம்சோனின் வலிமை மீண்டும் புத்தம் புதிய பொலிவுடனும் வலிவுடனும் வெளிப் பட்டுள்ளது (பக். 112). தன் மைந்தன் தனக்காற்றிய நன்றி எத்தகையது என் பதை உணர்ந்துகொண்ட நிலையில் மனேவா, அவன் எதைச் செய்தாலும், செம்மையாகச் செய்தான். நல் நோக்கத்திற் காய்ச் செய்தான். இதைவிடச் சிறந்த இறப்பு வேறு ஏதுவு மில்லை. எனவே அவன் மறைவுக்காய் நாம் வருந்தத் தேவை யில்லை. மாருக மகிழ்ச்சியும், மனநிறைவும் கொள்வோம்’ (பக். 113) என்று உள்ளம் திறந்து பேசுகிருர். குழு ஆட்கள் எழுப்பும் தங்கள் இறுதிப் பாடலில்: " சில நேரங்களில் கடவுள் நம்மை வெறுப்பதுபோல் தோன்றும். ஆனல் அவர் மீண்டும் எதிர்பாராத வகையில் நமக்கு நன்மை செய்வார்’ (பக். 114) என்று இறையாற்றலின் திறத்தை வியந்து போற்றி மகிழ்கிருர்கள். இச்சிறந்த காவியத்தைத் தமக்கே உரித்தான எளிய, இனிய தமிழ் நடையில் வழங்கும் கவிஞர் த. கோவேந்தன் அவர்கள் தமிழகம் நன்கறிந்த தனிப்பெரும் கவிஞர்களுள் iv