பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 61 யிருக்க முடியும். என் வெட்கக்கேடான இயலாமையால் அவளிடம் நான் கொத்தடிமைபோல் பிணைக்கப்பட்டேன். என் மதத்திற்கும், தன்மதிப்பிற்கும் எவ்வளவு பெரிய மானக்கேட்டை உண்டாக்கிவிட்டேன். மனவுறுதி இல்லா மல், மனைவிக்கு அடிமையாகிவிட்டேன். இந்தத் தவற் றுக்காக நான் அடிமைகளோடு உழைக்கின்ற சரியான தண்டனையைப் பெற்றிருக்கிறேன். இந்த எனது இழிநிலை தீலியாளிடம் நான் அடிமைப்பட்டுக்கிடந்த இழிநிலையைவிட அதிக இழிவானது அன்று. அவளிடம் நான் இருந்த நிலையே மிகவும் ஈனமான, இழிவான, மானமற்ற, வெட்கக்கேடான நிலையாகும். முன்பு நான் என் மனம் ஒரு பெண்ணின் விருப் பத்திற்கு அடிமைப்பட்டுக்கிடப்பதைக் காணமுடியாத பண் பற்ற குருடனய் இருந்தேன். அந்த அகக்கண் இல்லாத நிலையே. இப் புறக்கண் இல்லா நிலையினும் கீழானது. மனுேவா: மகனே! நான் பெலித்திய பெண்களின் திருமணத்தைப் பாராட்டவில்லை. மாருக அதனை நான் ஏற்கவிலலை. ஆனல் இது இறையாணையின் துண்டுதல் என என்னிடம் வாதிட்டாய். இத்திருமண உறவால் பெலித்தி யர்களைத் தண்டிக்க தக்க வாய்ப்பு என்றும் வாதிட்டாய். ஆனல் நான் சொல்லுவதுதான் சரியென்று அப்போது நான் உன்னிடம் வற்புறுத் தவிலலை. தீலியாளின் திருமணத்தைப் பெலித்தியர்கள் உன்னைத் தங்கள் அடிமையாக்க நல்ல வாய்ப்பாகவும் தங்கள் வெற்றியின் அறிகுறியாகவும் கருதி னர். ஒரு பெலித்தியப் பெண்ணை மணந்துகொண்டதன் விளைவாகப் பெண்மையின் கவர்ச்சியில் கவர்ந்திழுக்கப்பட்ட வைைய். உன் இனப்பெண் ஒருத்தியை மணமுடித்திருந்தால் இநநிலை உனக்கு ஏற்பட்டிருக்காது. நீ கடவுளின் கமுக் கத்தை மீறிவிட்டாய். அமைதியாய் நின்று கமுக்கத்தைக் காப்பாய் என்று உனனை நம பித் தந்த தெய்வ கமுக்கத்தை மீறிவிட்டாய். உண்மையிலேயே உனது இந்த துன்பங்கள் பெரியவை. உனது குறறத்தின் மிகப் பெரிய விளைவுகளை நீ தாங்கிக்கொண்டிருக்கிருய். உன் தவற்றுக்காகத் துன்பப் பட்டாய். இன்னும் துன்பப்படுகிருய். உனது துன்பங்கள்