பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவர் ஆவார். தமிழ்பா நிலவு' என போற்றப்பெறும் நண்பர் கோவேந்தன் உரைநடையிலும் கவிதைப் படைப் புக்கு ஈடான ஆற்றலும், திறனும் கைவரப் பெற்றவர் என்பது இந்நூலைப் படிக்கும்போது தெளிவாகின்றது. ஏன் மில்ட்டனின் இந்தக் காவியத்தைக் கவிதை வடிவில் மொழி பெயர்க்கவில்லை?” என்று நான் அவரிடம் கேட்டபோது, 'நீங்கள் என் எழுத்துப்படியைப் படித்துப் பார்க்கும்போது அதற்கு விடையைத் தெரிந்துகொள்வீர்கள்’ என்று கூறினர். மூலக் காவியத்தின் சுவை குன்ருமல் வழங்குவதற்கும்வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்வதற்கும் தகுந்த உரை நடையை அவர் தேர்ந்துள்ளார். பல ஆங்கிலக் கவிஞர் களின் பாடல்களை அவ்வப்போது மொழிபெயர்த்துள்ள நண்பர் கோவேந்தன் அவர்களின் இந்த உரைநடை ஆக்கத் தைப் படிக்கும்போது கலில் கிப்ரான், தாகூர், பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் உரைநடைச் செல்வங்களை நினைந்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய மில்ட்டன் வரலாறு இந்நூலுக்கு அணி செய்யும் வ ைக யி ல் சேர்க்கப்பட்டுள்ளது. சிம்சோன் வரலாற்றைக் கூறும் திருமறைப் பகுதியையும் வாசகர்களுக்கு மூலக் கதையின் வடிவத்தைத் தெளிவுபடுத்துவதற்காக இணைத்துள்ளோம். வரலாற்றுப் பின்னணியில் மில்ட்டனின் படைப்புகளை ஆய்வு செய்திடும் அரிய கட்டுரையைத் திரு. ஆ. இரா. வேங்கடாசலபதி எழுதி வழங்கியுள்ளார். இந்தப் பின்னணிகளோடு மாமல்லன் சிம்சோனின் நெஞ் சுரத்தைக் காட்டும் காவியத்தின் உரைநடைஆக்கத்தைப் பயில்வோர் பெருதற்கரிய இறையியல் சார்ந்த இலக்கிய அனுபவத்தைப் பெற்றிடுவர் என்பதில் ஐயம் இல்லை. இந்நூலப்போன்ற தமிழாக்கச் செல்வங்கள் பலவற்றை வழங்கும் பணியைத் தம்முடைய பல்திறப்பட்ட தமிழ்ப் பணிகளோடு இணைத்துக்கொண்டு தம் எழுத்துப் பணியைக் கவிஞர் கோவேந்தன் அவர்கள் தொடரவேண்டும் என்பது y