பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 67 சிம்சோன்: மதுவினிடமிருந்து நான் விலகியிருந்ததன் விளைவு என்ன? அதைவிட வெறியூட்டும் மங்கையிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ளத் தவறிவிட்டேனே. ஒரு வாயிலை மட்டும் அடைத்துவிட்டு மற்ற வாயில்களை எதிரிகள் நுழையத் திறந்துவைந்திருப்பதால் பயனேது? எனது தோல்வியும் வீழ்ச்சியும் எனது ஆண்மையின்மையால் விளைந் ததே. அதனல் இன்று நான் குருடனய், அடிமையாய், நாணமற்றவனாய், புகழ் குன்றியவனாய் ஒடுக்கப்பட்டவய்ை, ஒதுக்கப்பட்டவய்ை ஆனேன். இப்போது நான் எவ்வகை யில் பயனுள்ளவனாக இருக்கிறேன்? கடவுள் என்னிடம் ஒப்படைத்த பணியை நான் எப்படிச் செய்யமுடியும்? என் நாட்டிற்கு நான் இனி எவ்வகையில் தொண்டாற்ற முடியும்? இனி மற்றவர்களின் பார்வையில் நான் ஒரு பரிவுக்குரிய வன், வியப்புப் பொருள், குருடன், மடியன் அவ்வளவு தான். என் வல்லமைக்குரிய அந்தக் குடுமிச் சுருள் இப் போது பயனற்றதாய்ப் போய்விட்டது. இப்போதுகூடச் சுருள் சுருளாய்த் தொங்கும் தலைமுடி எனக்குண்டு. ஆனல் அவை தங்கள் பழைய வலிமையை, ஆற்றலை இழந்து, வெறும் நினைவுப் பொருளாகவே காணப்படுகின்றன. இப் போது நான் வீணே அமர்ந்து என் வாழ்வைக் கழிக்க வேண் டும். அது என் கால் கைகளைச் செயலிழக்கச் செய்துவிடும். வெறுப்புக்கும் அருவருப்புக்கும் உரிய முதுமையை அது அடையச் செய்துவிடும். எனவே நான் சிறையில் தங்கி, அடிமைபோல் உழைத்து, வாழ்விற்குரியதை ஈட்டி, உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்கின்ற, அழகிய அடிமைக்கு வழங்கு கின்ற உணவை உடுை, எனது வல்லமை அனைத்தையும் அழித்து, நான் என்றும் ஆவலோடு உதவிக்கு நாடும் சாக்காட்டைக் காணும் வரை சிறையில் இருப்பதே நலம். என் வாழ்வின் வேதனைகளுககெல்லாம் இறப்பே விடுதலை யளிக்க முடியும். மனுேவா: பெலித்தியர்களை அழிக்க ஆண்டவனல் கொடுக்கப்பட்ட அந்த வல்லமையால் அவர்களுக்குத் தொண்டு செய்யவா போகிருய்? அதைவிட வீட்டில் வந்து,