பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மாமல்லன் சிம்சோன் பான பணிகளைச் செய்யவே கடவுள் என்னைப் படைத்தார். அத்தகையப் பணிகளைப் பெலித்தியர்களுக்கு எதிராக நான் செய்தேன். இப்போதே அவர் பணியில் முழுமையாக ஈடு படாததால் வானுலகம் என்னைப் புறக்கணித்துவிட்டது. கடவுளின் அழைப்பின்பேரில யாரை நான் தாக்கினேனே அந்தக் கொடிய எதிரிகளிடம் நான் ஒப்படைக்கப்பட்டிருக் கிறேன். வானுலகால் நான் கைவிடப்பட்டேன். ஈடு செய்ய முடியாத பார்வையிழப்பால் நான் தொல்லைப்படு கிறேன். என் எதிரிகளின் வெறுப்புக்கும், கொடுமைக்கும் உரிய ஒரு பொருளாக இருந்துவருகிறேன். எனது இழப் பீடுகள் மிகுதி. அவற்றினின்றும் விடிவே இல்லை. இழந்த பார்வையை மீண்டும் பெறுவேன் என்பது அரிதானதே. அவர் எனக்கு இறப்பை விரைவில் தரவேண்டும் என்பதே எனது இப்போதைய வழிபாடு. இறப்பே என்னே வாட்டும் எல்லாக் கொடுமைகளுக்கும் ஒரே முடிவு. புண்ணிற்கு மருந்துபோல் இறப்பு மட்டுமே எனக்கு ஆறுதல் தரமுடியும். குழு ஆள்: துயரங்களையும், இழப்புகளையும் தாங்கும் மன வலிமையின் பெருமைகளைக் கூறும் அறிவர்களின் பொன் மொழிகள் பல பழைய புதிய புத்தகங்களில் காணலாம் எதையும் தாங் கு ம் நெஞ்சத்தின் பெருமைகளைப்பற்றி எல்லாக் காலத்து அறிஞர்களும் தங்கள் நூல்களில் குறிப் பிட்டுள்ளனர். பொறுமை பற்றியும் சலியாத மன வலிமை பற்றியும் சீரிய சிந்தனையாளர்கள் பாராட்டியுள்ளனர். அப்படிப்பட்ட பாராட்டுகளால் மனக்கவலைகளே மாற்றவும் துயரங்களைப் போ க் க வு ம் முயன்றுள்ளனர். அளவிட முடியாத துயரத்தில் இருப்பவர்களுக்கு அவர்களின் கூற்று பயனற்றதே. மாரு க அது அவர்களுக்கு வெறுப்பையே ஊட்டும். இறைவன் அளிக்கும் ஆறுதல ஒன்றே அளவற்ற துன்பமுடையவர்களை ஆறுதலபடுத்தும், தேற்றும், தெளிவு படுத்தும். உண்மை ஆறுதல் வெளியிலிருந்து புகுத்தப்படுவ தன்று. தாமாகவே அவரவர் உள்ளத்திலிருந்து உருவாக வேண்டும்.