பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 71 எங்கள் முன்னேர்கள் வழிபட்ட தெய்வமே! மாந்தனின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக, முரணுக அவனை நீ பயன் படுத்துவதேன்? மாந்த வாழ் வு குறுகியது. எனினும் அவனது துயரங்கள் மிகுதி. தேவதுTதர்களுக்கும் மற்ற விலங்கினங்களுக்கும் அளிப்பதுபோல், மாந்தனுக்கு நீ கொடுக்கும் ஆணைகள் ஒரு சீராய் இருப்பதில்லை. எவ்வித நோக்க முமின்றி நாடோடிபோல் வாழ்ந்த அந்த மாந்தர் களே அல்ல இங்கு நாம் குறிப்பிடுவது. அவர்கள் ஈசல்களைப் போல் பிறக்கிரு.ர்கள், வளர்கிரு.ர்கள், மடிகிருர்கள். அவர் கள் தாங்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்து விடுகிருர் கள். ஆனல் மாபெரும் பணிகளைச் செய்யவென்ற உன்னல் தெரிந்துகொண்ட மக்கள் பலர் உண்டு. அப் பணிகளைச் செய்ய உனது வரம்பெற்றவர்கள். அ. த் த ைக ய வரங் களால் உன்னுல் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் காக்கப் படுகிருர்கள். எனினும் அவர்கள் உன் வரங்களால், உன் பணிகளைச் செய்து புகழேணியின் உச்சியில் நிற்கும்போது அவர்கள் .ெ ச ய் து வ ந் த கடந்தகாலத் தொண்டுகளைக் கருத்தில் கொள்ளாமல் அடிக்கடி அவ் வரங்களே நீ மீளப் பெற்றுக்கொள்கிருய். அப்படிச் செய்வதால் அவர்களை நீ நிலை தாழ்த்துவது மட்டுமல்லாமல், அவர்களின் பழைய நிலையினும் கீழான நிலைக்குக் கொண்டுபோகிருய். பிறர் கண்களில் அவர்கள் தங்கள் முதன்மைச் சிறப்பு எல்லாவற்றையும் இழந்து, கீழ் நிலைக்குத் தள்ளப்படுகிருர்கள். செய்த சில தவறுகளுக்காக அவர்களை இப்படி நடத்துவது கொடுமையானது. அது மட்டுமன்று, நீ அவர்களைப் பகைவர் கையில் ஒப்புவிப்பது அதனினும் கொடியது. அப்படி ஒப்படைத்து, அவர்களின் பிணங்களை எதிரிகள், நாய நரிகளுககும், பறவைகளுக்கும் உணவாக எறிவது அதனினும் கொடிது. நன்றிகெட்ட மக்களால் அவர்கள் ஒதுககப்படுகிருர்கள். இப்படிப்பட்ட கொடுமைகளை அவர் க ள் அனுபவிப்பதைவிட, வறுமை யையும் நோயையும் பெற்று முதுமை அடையா இளம் பருவத்திலேயே ஊனமுற்றுத் தொல்லையடைவது நல்லது.