பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 75 வழி அதனை நான் பிறர்க்கு வெளியிட நீங்களே எனக்கு வழி காட்டி. ஆனால் நீங்கள் உங்கள் கமுக்கத்தை உங்களுடைய மனைவியிடம் வெளியிட்டீர்கள். ஆளுல் நானே பகைவர்க ளுக்கு அதை வெளியிட்டுவிட்டேன். குறைபாடான இபல் புடைய பெண்ணிடம் நீங்கள் உங்கள் கமுக்கத்தை வெளி பிட்டிருக்காது இருந்திருந்தால், நான் அதனை வெளியிட் டிருக்கமாட்டேன். நான் உங்களுக்குக் கொடியவளாகு முன்னே, நீங்களே உங்களுக்குக் கொடியளுகிவிட்டீர்கள். எண்ணிப்பார்த்தால் எனது குறை உங்கள் குறைபாட்டைப் போன்றதே. அவை ஒன்ருேடொன்று தொடர்புடையவை. ஆகவே, நீங்களே குறைபாட்டோடு இருந்தீர்கள் என்ற எண்ணம் என் குறையை மன்னிக்கும்படி செய்யட்டும். எனவே உங்கள் குறைபாட்டையும் மக்கள் பரிவோடு ஆய்ந்து முறைசெய்வார்கள். நீங்கள் என்னிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் இருந்தால் மக்களும் உங்களிடம் கடுமையாக முறைதீர்க்கமாட்டாாகள். என்னுடைய செயல்க ள், அன்பினல் விளைந்தனவே அன்றி வெறுப்பினல் அல்ல என்று கருதுங்கள். அன்புள்ள நெஞ்சத்தைத் தடுமாறச் செய்யும் ஆறறல் பொருமைக்கு உண்டு. உங்களிடத்தில் எனக்கிருந்த அன்பு என்னைத் தடுமாறச் செய்துவிட்டது. உங்களிடம் கொண்ட அளவற்ற அன்பே நான் அப்படிச் செய்யும்படி என்னைத் துாண்டிவிட்டது. அன்பில் நீங்கள் நிலையாக இல்லை. திம்னவில் நீங்கள் மணந்துகொண்ட உங்கள் முதல் மனைவியைவிட்டு சில நாள்களிலேயே பிரிந்து சென்றது போல் என்னைவிட்டும் நீங்கள் பிரிந்துவிடுவீர்களோ என ஐயப்பட்டேன். எப்படியேனும் என்ளுேடு உங்களை எப் போதும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று முயன்றேன். உங்கள் வலிமையின் கமுக்கத்தை வற்புறுத்தித் தெரிந்து வைத்துக்கொண்டு அதன்மூலம் உங்களை என்னோடு இணைத் துக்கொள்வதைவிட வேறு சிறந்த வழி எனக்குத் தோன்ற வில்லை. * நீங்கள் வினவலாம், உங்கள் பகைவர்களிடம் ஏன் அந்த கமுக்கத்தை வெளியிட்டேன் என்று. நான் உங்களுக்குச்