பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மில்ட்டன் 85 முடியவில்லேபோலும். எதையும் புரிந்துகொள்கின்ற திறன் அவளுக்கு இல்லை. எனவேதான் நல்லதைவிடத் தீயவைக்கே அவள் இணக்கம் காட்டுகின்ருள். அவள் தன்னல அன்பு கொண்டவள். எனவேதான் அவள் அன்பு நிலையற்றதாய்க் காணப்படுகின்றது. அவள் எதையும் நீண்ட நாள் விரும்புவ தில்லை. காரணம் எதுவாயினும், அறிவர்களுக்கும், நற்பண் பாளர்களுக்கும்கூட அவர்கள் தொடக்கத்தில் அழகுள்ளவர் களாய்க் கற்புள்ளவர்களாய்த் தோன்றுகிருர்கள். அவர்கள் கறைபடாதவர்களாய்க் கன்னியாய், அடக்கமுடையவர் களாய், அறிவுள்ளவர்களாய் இனிமையும், இளகிய நெஞ்சு முள்ளவர்களாய் முதலில் தோன்றுகின்றனர். திருமணத் திற்குப் பிறகு இவற்றுக்கு எதிராய் மாறிக் குடும்பத்தின் மகிழ்ச்சியின்மைக்குக் காரணங்களாக ஆகிருர்கள். திரு மணத்திற்குப்பின் தவிர்க்கமுடியாத தீங்காய் விளங்குகின்ற னர். கீழ்ப்படியாமை உடையவர்களாகிவிடுகின்றனர். பெண் தனது புற அழகால் ஆணே வீழ்த்தி முன்னேறவிடாமல் தடுத்துவிடுகிருள். அவனே அழிவுக்கு இழுத்துச் செல்கிருள். ஆடவன் அவளுக்கு அடிமையாகி, மானக்கேட்டுக்குரிய பல செயல்களைச் செய்துவிடுகிருன். ஒரு கப்பல் தலைவன் எவ் வளவுதான் சிறந்தவய்ை இருந்தாலும் மீகாமன் சரியாக அமையாவிட்டால் அக் கப்பலே அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது. அதைப்போல் ஒர் ஆடவன் எவ்வளவுதான் சிறந் தவனக இருந்தாலும், மனைவி சரியாக வாய்க்காவிட்டால், அவளுல் அவனது அழிவைத் தடுத்து நிறுத்தமுடியாது. நல்ல மனைவி அமைவது அரிதே. நல்ல மனைவியை உடையவன் பேறுபெற்றவன். அவன் இனிய குடும்ப வாழ்வு நடத்துவான். அவனது வாழ்வில் அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் இடையூறு ஏற்படுவதில்லை. எதிர்ப்புகளையும் கலக்கங்களையும் தாண்டி வென்று நிற்கின்ற கடவுளால் ஏற் றுக்கொள்ளக்கூடியது. ஆகவேதான் கடவுள் ஆடவனுக்கு அவன் தன் மனைவியை அடக்கியாளும் வல்லாண்மையைக் கொடுத்துள்ளான். கணவன் தன் அதிகாரத்தை மனைவிக்கு