பக்கம்:மிஸஸ். இராதா.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ராதா ஒரு புதிர்

தேன்துளி தின்னத் தின்னச்
சிறிதுமே திகட்டாது.
தேவர் தந்த பூமாலை
சூடவும் திகட்டாது.
மனைவி தந்த வெற்றிலையின்
மகிழ்ச்சியும் திகட்டாது.
தாய் ஊட்டும் பால்சோறு
சாப்பிடத் திகட்டாது.
தந்தை தந்த பொன்னாடை
தரிக்கத் திகட்டாது
காவிரி தேவி புகழ்
பாடப் பாடத் திகட்டாது.
                    —குடகர் பாட்டு மொழிபெயர்ப்பு


ரித்த பாம்புச்சட்டையைப் போல் உலர்ந்து தோட்டங்களை ஊடுருவிக்கொண்டு செல்லும் அந்தச் சாலை, குடகு நாட்டின் தலைநகரான மெர்க்காராவிலிருந்து காப்பித் தோட்டங்களுக்குப் போவதற்காகத் தோட்ட முதலாளிகளால் அவர்கள் செலவில் அமைக்கப்பட்டது. ஜீப்புகளும், டிராக்டர்களுமாக அடிக்கடி அந்தப் பாதையில் ஓடி அதைக் கந்தைத் துணிபோல் ஆக்கி வைத்திருந்தது. வாகனங்கள் இல்லாத எஸ்டேட் முதலாளிகள் அங்கு இல்லை. எது வேண்டுமானலும் அவர்கள் மெர்க்காராவுக்குத்தான் வந்து வாங்க வேண்டும். எப்படியும் ஒரு முறையாவது ஒவ்வொரு தோட்டக்காரரும் மெர்க்காராவுக்கு வந்துதான் திரும்புவார்கள். அதனால் மெர்க்காரா, மெர்க்காரா என்று நொடிக்கு ஒரு முறையாவது அதன் பெயரைச் சொல்ல, வேண்டி வந்துவிடும். பெட்ரோல் போட வேண்டுமானலும், டீசல் போட வேண்டுமானலும் மெர்க்காராவுக்குத்தான் போக வேண்டும். கறி வாங்க, காய், கனிகள் வாங்க, ரொட்டி வாங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/7&oldid=1549373" இலிருந்து மீள்விக்கப்பட்டது