பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/286

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

283

20

இருபதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சுந்தரா சொன்ன

ஏமாற்றப்போய் ஏமாந்தவர்கள் கதை

"கேளாய், போஜனே! ஒரு நாள் கையெழுத்து மறையும் நேரம்; மிஸ்டர் விக்கிரமாதித்தர் கடற்கரையில் உட்கார்ந்து, நீலக் கடலைக் குனிந்து முத்தமிடும் நீல வானை நோக்கிக்கொண்டிருக்க, அதுகாலை கையில் 'டிரான்ஸிஸ்ட' ருடன் இரு மாணவர்கள் அவரிடம் வந்து, 'இந்தி டிரான்ஸிஸ்டரை இங்கே வைத்துவிட்டுப் போகிறோம்; கொஞ்ச நேரம் பார்த்துக்கொள்கிறீர்களா? கடலில் குளித்துவிட்டு வந்து எடுத்துக்கொள்கிறோம்!' என்று சொல்ல, 'அதற்கென்ன, வைத்துவிட்டுப் போங்கள்!' என்று அவர் சொல்ல, அவர்கள் தங்களுடைய 'டிரான்ஸிஸ்ட'ரை அவருக்கு அருகே வைத்துவிட்டுப் போவாராயினர்.

அவர்கள் தலை மறைந்த சிறிது நேரத்துக்கெல்லாம் போலீஸ்காரருடன் வந்த யாரோ ஒருவர், 'காணாமற்போன என்னுடைய டிரான்ஸிஸ்டர் இதுதான், ஐயா! எவ்வளவு பெரிய மனிதர் எப்படிப்பட்ட காரியம் செய்திருக்கிறார், பார்த்தீர்களா?’ என்று விக்கிரமாதித்தரைச் சுட்டிக் காட்டிச் சொல்ல, 'இந்தக் காலத்தில் பெரிய மனிதராவது, சிறிய மனிதராவது? எல்லாம் வெறும் வேஷம்! திருடுவதையும் திருடிவிட்டு இவர் எவ்வளவு தைரியமாக இங்கேயே உட்கார்ந்திருக்கிறார், பாருங்கள்!' என்று போலீஸ்காரர் சொல்ல, விக்கிரமாதித்தர் திடுக்கிட்டு, 'யாரைத் திருடன்