பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

39

‘லூப்பா!’

'ஆமாம், ஆஸ்பத்திரிக்குப் போய் அதை வச்சிகிட்டு வந்துட்டா அந்த வம்பே வராதாம்; இஷடத்துக்கு விளையாடலாமாம்!'

‘உங்களுக்கு எல்லாம் விளையாட்டாயிருக்கு!’

‘வாழ்க்கையே ஒரு விளையாட்டுத்தானேடி?'

‘இருக்கும்; பணக்காரனுக்கு அது விளையாட்டாய்த்தான் இருக்கும். ஏழைக்கு அது வேதனையாயில்லே இருக்கு?'

‘என்ன வேதனை? தவறினால் நாலு குழந்தைகள் பிறக்கும்; அவ்வளவுதானே?'

‘ஏன், அனாதைக் குழந்தைகளாக அலையவா?'

'ஆமாம்; அதற்குத்தான் நம்ம தேசம் ஏற்கெனவே பேர் போனதாச்சே! நாம் புதுசாவா அலையவிடப் போறோம்?'

‘அப்புறம் அந்த மாதிரிக் குழந்தைகளுக்கு நீங்க அனாதை ஆசிரமம் கட்டுவீங்க; தாராளமா தான தருமம் செய்வீங்க; அப்படித்தானே?'

'ஆமாம்; பாவமும் நானே, புண்ணியமும் நானே!'

‘நல்ல கூத்தய்யா, உங்க கூத்து!' என்று அவள் சிரிக்க, 'ஐயோ, சிரிக்காதேடி! உன் சிரிப்பு என்னை எங்கேயோ தூக்கிக்கிட்டுப் போகுதடி, என்னை எங்கேயோ தூக்கிக்கிட்டுப் போகுதடி!' என்று அவர் மேலும் சொக்கி, அவளைத் தாவி அணைக்கப் போக, ‘அட, உன்னைக் கட்டையிலே வைக்க!' என்று அவள் அவருடைய கன்னத்தில் ‘பளார்' என்று அறைந்துவிட்டு, ‘உன் வேலையும் வேணாம், நீயும் வேணாம், போ!’ என்று தன் குடிசையை நோக்கி நடையைக் கட்டுவாளாயினள்.

‘அப்படியா சேதி? உன்னை விட்டேனா, பார்!' என்று கருவிக் கொண்டே சென்ற பண்ணையார், அன்றிரவே