பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


‘என்ன?' என்றார் பெரியவர்; ‘பெண்!' என்றான் காடுவெட்டி.

‘பெண்ணா?' என்றார் பெரியவர்: 'ஆமாம்' என்றான் காடுவெட்டி.

'ஆமாம் என்றால்?’ என்றார் பெரியவர்: ‘இறக்கு, பெண்ணை!’ என்றான் காடுவெட்டி.

‘எந்தப் பெண்ணை?' என்றார் பெரியவர்; ‘கலியாணப் பெண்ணை!' என்றான் காடுவெட்டி.

“எதற்கு?' என்றார் பெரியவர்; “சும்மாதான்!' என்றான் காடுவெட்டி.

'சும்மாதான் என்றால்?’ என்றார் பெரியவர்; 'அதெல்லாம் உமக்குச் சொல்லாமலே தெரிந்திருக்க வேண்டும்!’ என்ற காடுவெட்டி, அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அந்தப் பெண்ணை அப்படியே தூக்கிக்கொண்டு நடக்க, 'ஐயையோ! இது அநியாயம், அக்கிரமம்! உம்மைப் போன்ற பெரிய மனுஷனுக்கு இது அழகல்ல!' எனப் பெரியவர் அவனையும் ‘பெரிய மனிதர்களின் பட்டிய'லில் சேர்த்துக் கூற, 'பெரிய மனுஷனென்றால் அவன் இப்படி யெல்லாம் செய்ய மாட்டான் என்று உமக்கு யார் ஐயா, சொன்னது? சின்ன மனுஷன் பகிரங்கமாகச் செய்தால், பெரிய மனுஷன் ரகசியமாகச் செய்வான்; அவ்வளவுதான்! இதுதான் இரண்டு மனுஷன்களுக்கும் உள்ள வித்தியாசமே தவிர, மற்றபடி எல்லாம் ஒரே மனுஷன்தான்! நீராக ஏதாவது நினைத்துக் கொண்டு அவஸ்தைப்பட்டால் அதற்கு நானா பொறுப்பு? கொஞ்சம் பொறும்; இதோ, உம்முடைய பெண்ணை உம்மிடமே கொண்டு வந்து விட்டுவிடுகிறேன்!’ என அவன் மேலே நடக்க, ‘அடப் பாவி, அவள் மேல் இருக்கும் நகைகளை வேண்டுமானால் கழற்றிக் கொண்டு அவளை மட்டும் விட்டு விடு!’ எனப் பெரியவர் அவனைக் 'கெஞ்சு, கெஞ்சு' என்று கெஞ்ச, ‘எனக்கு இப்போது