பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'

விந்தன்

81

தொழிலைக் காட்டுமிராண்டித்தனமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவே வித்தியாசம்!’ என்று பெரியவர் அவளுக்குப் புரிய வைப்பாராயினர்.

இந்த விதமாகத்தானே வழி நெடுகக் காடுவெட்டியின் அருமை பெருமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்ற அவர்கள் அனைவரும் ஊர்க் கோயிலை அடைய, அவர்களுக்காக அங்கே வந்து காத்திருந்த பிள்ளை வீட்டார் அகமும் முகமும் ஒருங்கே மலர அவர்களை வரவேற்று அழைத்துக் கொண்டு போய், அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பாராயினர்.

மறுநாள் காலை கொட்டுமேளம் முழங்க, கலியாணம் ‘ஜாம், ஜாம்’ என நடந்து முடிய, பந்தி போஜனம் முடிந்து, தாம்பூலம் தரித்துக் கொண்டதும், பெண் வீட்டார் பிள்ளையை அழைத்துக்கொண்டு தங்கள் ஊருக்குக் கிளம்ப, ‘இந்தத் தடவை அந்தக் கொல்லிமலைக் காட்டு வழியே போக வேண்டாம்; கொஞ்சம் சுற்று வழியாயிருந்தாலும் வேறு வழி பார்த்துக் கொண்டு போங்கள்!' என மூதாட்டிகளில் ஒருத்தி சொல்ல, 'வேண்டாம்; வந்த வழியே போங்கள்!’ எனக் கண்மணி சொல்வாளாயினள்.

‘ஏன்?' என்று கேட்டாள் மூதாட்டி; 'பொறுத்துப் பாருங்கள்!' என்றாள் கண்மணி.

‘சரி!' என்று பெரியவர் வந்த வழியே வண்டியை ஓட்ட, கொல்லிமலைக் காட்டை அடைந்ததும் கண்மணி வண்டியை விட்டுக் கீழே இறங்கிச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே எதையோ எடுத்துத் தன் இடுப்பில் செருகிக் கொள்வாளாயினள்.

‘என்ன அது?' என்று கேட்டார் பெரியவர்; ‘கத்தி!' என்றாள் கண்மணி.

'எதற்கு?' என்று கேட்டார் பெரியவர்; 'தற்காப்புக்கு!’ என்றாள் கண்மணி.

மி.வி.க -6