பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

சோக்ரதசின் சீடர்; மாபெரும் சிந்தனையாளர்; தத்துவ மேதை. இவரது சீடர் அரிஸ்டாடில். இந்திய நாட்டின் கருத்துக்களே இவர்தம் சிந்தனையை உருவாக்கியது எனலாம்.

மேற்கு நாட்டுக் கணிதம், இசை ஆகியவற்றின் தந்தை என்று பாராட்டப்படுகிறார் பிதாகோரஸ் என்பவர். இவர் கி. மு. 582ல் வாழ்ந்தவர். இவர் இந்திய நாட்டு அறிஞர்பால் கல்வி பயன்றவர் என்று சொல்லப்படுகிறது. ஜெர்மனியிலே பிறந்து லண்டனிலே வாழ்ந்து நமது உபநிஷதங்களை எல்லாம் ஆங்கிலத்திலே மொழிபெயர்த்த மகாமேதை மாக்ஸ் முல்லரே இப்படிச் சொல்கிறார்.

நமது நாட்டவரான பெளதாயன மகாமுனிவர் அருளிய சுலப சூத்திரங்களிலே ஒன்றுதான் யூக்லிடின் 47வது தீரம் என்று மாக்ஸ் முல்லர் சொல்கிறார்.

எனவே மீண்டும் அந்தச் சிந்தனே இயக்கம் இந்தியாவிலிருந்து உலகெங்கும் செல்லத் தொடங்குமானல் அது பற்றி ஆச்சரியம் கொள்ளவேண்டியதில்லை.

அமெரிக்க நாட்டு மாபெரும் சிந்தனைச் சிற்பியாகிய வில் டுராண்ட் கூறுகிறார் :

"இந்தியாவே நமது இனத்தின் தாய். சம்ஸ்கிருதமே ஐரோப்பிய மொழிகளின் தாய். நமது தத்துவங்களின் தாயும் அவளே. அராபியர் மூலம் நாம் பெற்ற கணிதத் தின் தாயும் அவள். கிறிஸ்தவ மதத்தின் உயரிய லட்சியங்களை புத்தர் மூலம் நமக்கு வழங்கிய தாய் இந்தியாவே. கிராம சமுதாய அமைப்பின் மூலம் ஜனநாயக