பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19


3. இடமும் மக்களும்

து ஜெட் யுகம். உலகமெங்கும் ஜெட் விமான யாத்திரை சகஜமாகி விட்டது. ஆனால் இந்திய நாட்டின் பகுதிகள் சிலவற்றிலே இன்னமும் கட்டை வண்டி சகாப்தமே நிலவாகிறது. கடுரிலிருந்து சிருங்கேரி 75 மைல். ஆனால் ஆறுமணி நேரம் பிரயாணம் செய்யவேண்டியிருக்கிறது.

சிருங்கேரிக்குப் போய்விட்டாலோ நேரம் தூரம் எல்லாம் ஓடி ஒளிந்து விடுகின்றன. சீதோஷ்ண சமநிலை பெற்ற இடம் சிருங்கேரி. ஆன்மிக வாழ்வு முதிர்வதற்கு ஏற்ற இடம்.

மைசூர் ராஜ்யத்திலே காப்பித் தோட்டங்களும் தேயிலைத் தோட்டங்களும் நிறைந்த சிக்மகளூர் ஜில்லாவின் விளிம்பிலே உள்ளதொரு தாலுக்காவின் தலைநகரம் சிருங்கேரி, பெரிய பெரிய உணவு விடுதிகளோ, லாட்ஜிங் விடுதிகளோ அங்கு காணமுடியாது. ஆனால் சிருங்கேரி மடத்து நிர்வாகம் உங்களே உள்ளன்புடன் வரவேற்கிறது. ஸ்நான வசதியுடன் கூடிய சுத்தமான அறைகள். சம்பிரமமான சாப்பாடு. பணம் கொடுக்க வேண்டுவதில்லை.

எவ்விதமான கவலையுமில்லாமல் மடத்தின் விருத்தினனாக சிருங்கேரியில் சில நாள் இருந்தால் போதும். அது உங்களைப் பெரிதும் மாற்றிவிடும். நீங்கள் பெரிதும் மேம்பாடுற்றவராய், மகிழ்ச்சி பெற்றவராய் ஊர் திரும்புவீர்கள். சிருங்கேரி ஒரு முனிசிபல் நகரம்தான். இருந்தாலும் நவீன நாகரிகம் அந் நன்னகரைப் பாழாக்கவில்லை.