பக்கம்:மீண்டும் சிருங்கேரி சென்றேன்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

வித்யா கணபதி, தஷிணாமூர்த்தி, பிரம்மா சரஸ்வதி, லகூஷிமி நாராயணன், உமா மகேசுவரன்.

இந்த ஆலயத்தின் கிழக்கு மண்டபத்திலே உலகமே அதிசயிக்கும் ராசித் தூண்கள் உள்ளன. மேஷம், ரிஷபம் முதலிய 12 ராசிகளுக்கும் 12 தூண்கள். ஒவ் வொரு தூணிலும் அந்த அந்த ராசியின் வடிவம் செதுக் கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் அந்த அந்த ராசிக் குரிய தூணில் சூரியனின் கிரணங்கள் விழும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் சிற்பச் சிறப்பு இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது.


5. மீண்டும் வந்த பழைய நினைவு

ம்முறை சிருங்கேரிக்குப் போன உடனே “சங்கர கிருபா”வில் ஓர் அறை கிடைக்கப் பெற்றேன். “சங்கர கிருபா” என்ற பெயர் என்னைச் சிந்தனையில் ஆழ்த்தியது. எனது சட்டை முதலிய சுமைகளைக் களைந்து எறிந்து விட்டு ஸ்நானம் செய்வதற்காக ஆற்றங்கரை நோக்கி வேகமாக ஓடினேன். வழியிலே இருந்த சாரதா தேவி ஆலயம், வித்யா சங்கரர் ஆலயம் ஆகியவற்றின் முன்னே கை கூப்பியவாறே கடந்து சென்றேன்.

இருபத்தைந்து ஆண்டுகள் முன்பு நான் சிருங்கேரிக்குப் போன போது எத்தகைய புறக் காட்சிகளைக் கண்டேனோ அவற்றிலிருந்து அதிகம் மாறுபடாத காட்சியே கண்டேன்.