பக்கம்:மீனோட்டம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தை 115 அவரிடம் வாங்கிண்டு. அவரும் நன்னாயிருக்கு நன்னர் யிருக்குன்னு சிரிச்சுண்டே சாப்பிட்டுட்டுப் போயிடறார். ஒரு தடவை அப்படி அவர் போனப்பறம் குழம்பை வாயில் வெச்சேன், உப்புப் போட மறந்தே போயிட்டேன்! வாயிலே வைக்க முடியல்லே...” மாமா கையில் கடியாரத்தைக் கட்டிய வண்ணம், வாசற் படியில் தடுக்கிக் கொண்டே வந்தார். 'அகப்பட்டதா?” அவர் அவளைப் பார்க்கையிலும், அவள் அவரைப் பார்க்கையிலும் உலக ரீதியில் அவர்கள் வாழ்க்கையில் ஏமாந்தவர்கள் ஆயினும், அவர் வாழ்க்கை வீணாகவில்லை யென்று நன்று தெரிந்தது. அவ்விரு நோக்குகளிலும் மிளிரும் குளிர்ந்த அனல் பிழம்பு அவர்களை ஒரே நோக்கின் இரு நுனிகளாய்த்தான் ஆக்கியது. அவர்கள் வாழ்க்கை வீணாக வில்லை. அவர்கள் மேல் ஒரு பெரும் அசூயை அவனுள் மூண்டது. அந்த நிமிஷமே..அவர்களைக் கொன்று விடலாமா என்று கூடத் தோன்றும் கோரமான அசூயை: ஒசைப்படாமல், அவ்விடம் விட்டு அவன் அகன்றான். x X 窯 ‘இனி அம்மாதிரி இன்பம் எப்போ’ எனும் ஏக்கம் கொடுக்கரிவாள் போல் வனத்தில் மாட்டியிழுக்கையில், உள்ளத்தில் உதிரம் கொட்டியது. இப்படிச் செய்தாளே பாபி: அன்பை அறியாத பாபி!” என்று அவள் மேல் எழுந்த சீற்றத்தில், மனப் போரில் அவளைத் திரும்பத் திரும்பக் கொல்லுகையில், அப்பொழுது கொட்டுவதும் அவன் உள்ளத்தின் உதிரந்தான்! அம்மாதிரி எத்தனை ஆயிரம் ராஜம், எத்தனை ஆயிரம் அம்பி தலை வேறு உடல் வேறாய், மன ரணகளத்தில் சிதறுண்டு கிடந்தார்கள்! X X x சாப்பிட்டதும் மாடிக்கு வந்து அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டு, அவள் பிறந்தகம் போன பின்னர், எனக்கு எழுதிய கடிதங்களை யெடுத்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தான். இதுவரை எத்தனையோ தடவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/116&oldid=870208" இலிருந்து மீள்விக்கப்பட்டது