பக்கம்:மீனோட்டம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i5: மீனோட்டம் வெளிச்சம்னு ஒரு அடையாளம் தவிர மற்றதெல்லாம் மறந்து போய், பொழுது போனதே தெரியாமல் போச்சு. அவர் ஆட்சி போச்சு. கூடவே வீடும் வெறிச்சிட்டுப் போச்சு. பேச்சும் செத்துப் போச்சு. இருள் வழிக்குக் கொடு உறவும் உறுதுணை தானே? போறவா போனப்புறம் தான் தெரியறது. இருக்கறவா வாழ்வும் போயிண்டேயிருக்கிறது தான் என்று--வாழ்வா இது? X X X X சாய்வுத் திண்ணையில் அரைத் தூக்கத்தில் அயர்ந்திருக் கையில் வயிறு மீது ஏதோ தொப்பென்று விழுந்து விழித்துக் கொண்டான். இரண்டு பல்லிகள்-ஆள் மேல் விழுந்தும் பிரியவில்லை. ஒன்றின் வயிற்றை ஒன்று கவ்விக் கொண்டு, இரண்டில் ஒன்றின் சாவுவரை சண்டை மூர்க்கத்தில் உருண்டு கொண்டே திண்ணையிலிருந்தும் விழுந்தன. பலனுக்குப் பஞ்சாங்கம் பார்க்கத் தெவையில்லை. இதெல்லாம் மனப்பாடம். வந்து கேட்பாருக்குச் சொல்லியாக வேண்டுமே கோவிலுக்குக் குருக்கள், ஊருக்குப் புரோகிதன், மாலையில் மாந்தரீகம்: காலையில் வேப்பிலையடிப்பு, இதெல்லாம் வயிற்றுப் பிழைப்பின் தந்திரத்தில் சேர்ந்த தாச்சே- வயிறு புத்ரலாபம்’ என்ற விடை மனதில் பளிச் சிட்டதும், முகம் புன்னகையில் இளகிற்று. எப்பவோ, என்றோ, நேர்ந்தது கூட மறந்து போச்சு: சாந்தி முகூர்த்த சுருக்கில்-என்னத்தையோ ஒரு துணியில் சுற்றிக் கொண்டு நாலுபேர் வீட்டை விட்டுக் கிளம்பினதாய் நினைவில் ஒரு தோற்றம். தாது அடித்து மடிந்தது. அந்த சுமையைக் கூட அவன் துக்கவில்லை. அவன் தகப்பனார் எடுத்துச் சென்ற ஞாபகம். அதற்குப் பின் லாபமுமில்லை. நஷ்டமுமில்லே. முதலில் நேர்ந்தால் தானே லாப நஷ்டத்திற்கு! சுற்றம் விட்டுப் போகக் கூடாது என்று இந்தக் கூட்டத் திற்கே உள்ள பயத்தில் தனக்குள் தானே பின்னிக் குமைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/153&oldid=870286" இலிருந்து மீள்விக்கப்பட்டது