பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 100 முன்னது குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பது போன்ற சுகம் தரு, வெப்பம்; பின்னது சிதையில் உயிரோடு கொளுத்துவது போது, சுடுகாட்டு வெப்பம். ஜெயகாந்தனின் தனித்தன்மை சுடர்விடும் எத்தனையோ இடங்கள் - காட்சிகள் இந்த நாவலில் உள்ளன. இதை ஒரு காவியமாக மதிக்கத் தெரிந்த வாசகர்கள்தான் அவற்றைக் கண்டு பரவசப்பட முடியும். கடைசியாக ஜெயகாந்தன் இந்த நாவல் மூலம் - அகிலா மூலம் . செய்யும் அன்புப் பிரச்சாரத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.

பாவம் என்றால் மன்னித்துவிடலாம்; குற்றம் என்றால்

கண்டிக்கலாம்; தப்பென்றால் திருத்தலாம்: என்கிறாள் அகிலா. பாவம், குற்றம், தப்பு எல்லாவற்றையும் செய்து நிற்கும் - தவறுக்கும் தவறான தவற்றைப் புரிந்துவிட்டு தறிகெட்டு நிற்கும் - பாலசுந்தரத்தை அவள் தண்டிக்க விரும்பவில்லை. 'நம்ப அன்புக்குத் தகுதியானவங்க ஒரு தப்பு செய்தால் அவங்களை நாமதண்டிச்சி அவமானப்படுத்தலாமா?" என்று அவள் கூறும்போது அன்புதான் வாழ்க்கைக்கு ஆதாரமானது, மேலானது என்ற உண்மை உணர்த்தப்படுகிறது. தன் கணவனிடம் மட்டுமல்ல, அவனுடன் வாழும் அமிர்தாவிடம் மட்டுமல்ல, அவள் குழந்தை களிடமும் பிரவாகமாய்ப் பாய்கிறது அகிலாவின் அன்பு. 'அண்ணா, நீங்கள் ஒரு மாதிரியான போராட்ட வாழ்க்கையையும், நான் ஒரு மாதிரியான போராட்ட வாழ்க்கையையும் மேற்கொண்டுவிட்டோம்! உங்கள் யுத்த காலத்தில் நீங்கள் உபயோகிக்கும் ஆயுதம் வேறு. இந்தப் போராட்டத்தில் நான் தரித்துள்ள ஆயுதத்திற்குப் Qutui Grcòfær@g5ńliquom? sienų... Yes - It is love and I love him.... I should love him more" என்று விவாகரத்து செய்யச் சொன்ன அண்ணனிடம் நெஞ்சம் நெகிழ்ந்து சொல்லும்போது நம் கைக்கெட்டாத, கண்ணுக்கெட்டாத உயரத்திற்குப் போய் விடுகிறாள் அகிலா.