பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 108 அப்படிப்பட்ட 'ஆத்ம தரிச'னத்தை வழங்குபவராகவே நாடு ஜெயகாந்தனைப் பார்க்கிறோம், அவரே குறிப்பிடுவதுபோல் வாழ்க்கையைப் பற்றிய விமர்சனமாகவே தன் கதைகளை அவர் படைத்துள்ளார். எனவேதான் அவை ஒவ்வொன்றும் குறைந்தது ஒரு பிரச்சனையையாவது உள்ளடக்கி இருக்கின்றன. நாம் எப்படியோ அப்படியே நல்ல படைப்பாளியின் கதைகளும் பிரதிபலிக்கின்றன. நாம்வேறு அவை வேறு என்று எழுத்தாளன் எண்ணுவதில்லை. இப்படி வாழ்க்கையை விமர்சனப் பாங்கோடு பார்த்து, படைப்பதற்கு ஆழ்ந்த சிந்தனை வேண்டும். அந்தச்சிந்தனை மொழி, தேசம் என்ற எல்லைகளைக் கடந்ததாக இருந்தாலே இயலும், தமிழ் மொழிக்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக அத்தகைய பண்பாட்டு சங்கிலி இணைப்பு அறாமல் தொடர்ச்சியாக வந்துகொண்டு உள்ளது. இல்லாவிட்டால் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் உலகளாவிய சிந்தனை இன்றைய தமிழ் இலக்கியச் 'சிங்கம்' - ஜெயகாந்தன் வரை தொடருமா? அதன் வெளிப்பாடாக அனைத்திந்திய அரசு நிறுவனமாம் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள தொகுப்பின் முன்னுரையில் ஜெ.கா. கூறுவது: 'மனிதனைப் பற்றிய மனிதனின் சிந்தனைகள் மொழி தேசம் என்கிற எல்லைகளையெல்லாம் கடந்து உறவாடுதல் நாகரிக வளர்ச்சியாகும். இலக்கியம் நாகரிகத்தின் உரைகல்: அப்படிப்பட்ட விசாலமான சிந்தனைகளை, வித்தியாசமான சிந்தனைகளை தம் பாத்திரங்களின் மூலம் பேச வைத்து, தமிழ் இலக்கியத்தை, மனிதகுல சிந்தனை வளத்தின் கருவூலமாக ஆக்கும் பணியைச் செய்த மாபெரும் சிந்தனையாளர் - எழுத்தாளர் (Greatest Thinker turned writer) என்று ஜெயகாந்தனை, தமிழ் இலக்கியத்தின் பரப்பில், நான் காண்கிறேன். t ஜெயகாந்தன் மணிவிழாவில் பேசியது சில குறிப்புகள் நாள்: 29-4-94