பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 11 தொழிலாளி வர்க்கத்தின் தொழிலாளியாகச் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். (நிறப்பிரிகை- 4, 1993) இத்தகைய பெண்ணியக் கருத்துக்களின் பிழிவாக சிற்பி தன் சகுந்தலாவைப் படைத்துள்ளார். கண்வ முனிவரின் மகளான சகுந்தலையைக் கானகத் தில் கண்டு காந்தர்வ மனம் புரிந்த துஷ்யந்த வேந்தன் நாடு சென்றதும் மறந்து விடுகிறான். அவளுக்கிருந்த ஒரே தடயப்பொருள் அவன் அணிவித்த மோதிரம்தான். கண்ணகி தடயப்பொருளான சிலம்பினை வைத்திருந்த தால் கனவன் பிழைக்கவில்லை எனினும், வழக்கு பிழைத்தது. ஆனால் சகுந்தலையோ காதலன் அணிவித்த மோதிரத்தையும் தொலைத்துவிட்டாள். அதனால் இந்தப் பாரத கண்டத்திற்குப் பெயர்க் காரணமானவனைப் பெற்ற அவள் பட்டபாடு கொஞ்சநஞ்சமா அவள் இவ்வாறு துன்பப்படு தலுக்கு துஷ்யந்தனைப் பொறுப்பாக்க விரும்பாமல் காளிதாசன் சகுந்தலைக்கு ஏற்பட்ட சாபத்தைக் கற்பித்து ஆடவரின் பிரதி நிதியான அவனை அப்பழியின்றும் காப்பாற்றுகிறான். சிற்பி முதன்முதலாக அதைத் தம் கவிதையின் மூலம் தோலுரித்துக காட்டுகிறார். ‘சாகுந்தல நாடகத்தில் காளிதாசன் கடைப் பிடிக்கும் கொள்கையும் அதுவே. பாரதத்தில் வரும் மூலக்கதையில், சகுந் தலையைக் கந்தருவத்திருமணம் செய்துகொண் டதை வேண்டுமென்றே மறுத்துப் பேசுவான் துஷ்யந்தன். சகுந்தலையின் கணவனுக்கு அத்தகைய வஞ்சனை கூடாது என்று கருதிய காளிதாசன்துருவாசர் சாபம் என்ற யுத்தியைத் தானாகப் படைத்துக்கொள்கிறான். கருத்தரித்த சகுந்தலை, கணவன் நினைவில் லயித்திருந்தபோது, விரைவில் வெகுளும் இயல் பினரானதுருவாசமுனிவர் அங்கு வந்தாரென்றும் அவளுக்கு நல்வரவு கூறாத அவளிடம் ஆத்திரம் அடைந்தாரென்றும், அவள் எவன் நினைவால் அறவோரைப் பேணும் கடமையை மறந்தாளே அவனால் மறக்கப்படுவாளென்று சபித்தாரென்றும் கற்பனை செய்தான்காளிதாசன். இவ்வாறு