பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 114 ஆக, பாபுராவ் பாகுலாலின் சிறுகதைகள் மூலம் தொடங்கி, மராட்டிய தலித் இலக்கியம் இன்று அனைத்திந்திய அளவில் குடி பிடித்துவிட்டது, மகாகவி பாரதி தமிழில் தலித்களுக்கான விடுதலைக்கு முன்பே பாடத் தொடங்கி விட்டார். வருகின்ற நாட்டு விடுதலை தலித்களுக்கும் சேர்த்து வரவேண்டும் என்று முழங் இனார். பறையருக்குமிங்கு தீயர் புலையருக்கும் விடுதலை! - * * * * * * * * * * - - - - * * * * * * * ஜாதியில் இழிவு கொண்ட மனிதரென்ப திந்தியாவில் இல்லையே! - என்றெல்லாம் பாரதி அன்றே பாடினார். பாவேந்தர் பாரதிதாசனின் பல படைப்புக்களில் நாயக நாயகிகள் தலித்களாகத் தான் உள்ளனர். தமிழில் தலித் இலக்கியம் பல்வேறு தலித் அல்லாத முற்போக்கு எழுத்தாளர்களாலும் படைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் தலித்’ இலக்கியம் இங்கு அரும்பு நிலையில் இருந்தபோதே அதனை அடையாளங்கண்டு கொண்டு, தமது பல கவிதைகளில் தலித்களைப் பற்றிப் பாடியுள்ளார் கவிஞர் சிற்பி. எனினும் அவற்றில் சிறப்பிடம் பெற்றது 'சிகரங்கள் பொடியாகும்’ எனும் அவரது கதைக் கவிதையாகும். பூனாச்சி மலையடிவாரத்தில் ஒரு கிராமம். வீரன் மகள் அருக்காணி. அவளின் காதலன் சின்னான். குளிக்கும்போது அவளைப் பார்த்த பண்ணையார் சின்னமலைக் கவுண்டருக்கு தன் பசிக்கு இரையாக்கும் நோக்கம் வந்து விடுகிறது. தன் காளைக் கன்றின் பசி நீக்க புல் அறுத்துப் போட்டுவிட்டுக் கண்ணயர்ந்த அருக்காணி பண்ணைக் காளையின் காமப்பசிக்கு இரையாகிறாள். சேரி மாந்தர் ஆனது ஆயிற்று' என்று ஒரு முடிவிற்கு வந்து விடுகின்றனர். வெட்டுக்குத்து விழும் என்று தெரிந்தும் பண்ணையாரின் வீடு நோக்கிச் சென்று அருக்காணியைப் பெண்டாண்டதன் மூலம் உறவாகி விட்டீர்கள். எங்கள் சின்னானுக்கு உங்கள் பெண்ணைத் தாருங்கள் என்று கேட்கின்றனர். விளைவு? குடிசைகள் பற்றி எரிகின்றன. பண்ணையாரின் பசிக்கு