பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 118 ஹைகூ இன்று அதன் எல்லைகளைக் கடந்து சிறகடித்துப் பறப்பதற்குக் காரணமே, சிட்டுக்குருவி போன்ற அதன் சின், உருவமே. சின்ன உருவம் என்பதற்காக யாரும் சிறுத்து மதிப்பிட்டு விடக்கூடாது. ஜப்பானியர் உருவில் குள்ளமானவர்கள்தான். அவர்களின் ஹைகூ போல, படகோனியர்கள் உலகிலேயே உயரமானவர்கள். ஆனால் படகோனியர்களை யாருக்குத் தெரிந்திருக்கிறது? அதேசமயம் அமெரிக்காவிற்கே சவால் விடும் நிலையில் உள்ள ஜப்பானியரைத் தெரியாதவர் யார் ஆக, 'ஆளும் வளரனும் அறிவும் வளரணும்; அதுதான் வளர்த்தி ஜப்பானியர்கள் ஆள் வளரா விட்டாலும் அறிவில் வளர்த்தி கண்டவர்கள். அவர்களின் கவிதை நெடிதாய் இல்லை; எனினும் அறிவார்ந்த செறிவுமிக்க சொற்கள் அதன் கட்டுக்கோப்புக்கு வலிமை சேர்க்கின்றன. முதல் அடியில் 5 அசைகள், இரண்டாவது அடியில் 7 அசைகள், மூன்றாவது அடியில் 5 அசைகள், ஆக 17 அசைகள் கொண்ட மூன்று அடிகளில் அமைந்தது ஹைகூ. இதன் வயது 300 ஆண்டுகளே என்றும், இன்றைக்கு அதன் பிறப்பிடத்தைக் கடந்த பெருமை பெற்று விளங்குகிறது. அதன் வடிவம் பார்வைக்கு அரைகுறையாக அமைக்கப் பட்டதுபோலத் தோன்றும். ஒரு புதிர் போலப் படைக்கப்பட்டு, உணர்த்த வரும் செய்தி தொக்கி நிற்பதாக வைக்கப்பட்டிருக்கும். ஒருவித சித்தர்பாடல் பாணி (Mytsic)அதன் கருப்பொருளில் இருக்கும். காரணம் இதன் ஆரம்ப கர்த்தாக்கள் அனைவரும் பெளத்த மதத் தொடர்புடையவர்களே. புதிர்போல என்று சொல்வதைக் காட்டிலும், நம் தமிழில் வழங்கி வரும் விடுகதை களைப் போல என்று கூறலாம் வடிவத்தைப் பொறுத்து மட்டும்: டாக்டர் வந்தார் ஊசி போட்டார் காசு வாங்காமல் போய்விட்டார் இந்த விடுகதை வடிவத்தைப் பொறுத்தமட்டில் ஹைகூவிற்கு நெருங்கி வருகிறது. இங்கே "தேள் என்னும் விடை சொல்லப்பட வில்லை. ஆனால், அந்த விடை தொக்கி நிற்கிறது. ஆனால் இதில் பெரிய கவித்துவமோ, மீண்டும் மீண்டும் படித்துச் சுவைக்கத் துண்டும் செய்தியோ இல்லை.