பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 121 துணுக்கமான திறத்துடன் சொற்களைச் செட்டாகக் கையாண்டு செப்படி வித்தை காட்டினர். எடுத்துக்காட்டாக, குளிர்ந்த நிலா மாரிக் காலத்துக் குறியீடாகவும், ப்ளம் பூத்திருப்பது இளவேனிலுக்கும், செந்நிறப் பூச்சிகள் கோடைக்கும், மேப்பிள் இலைகள் இலையுதிர் காலத்திற்குக் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஜப்பானிய ஹைகூக்கள் அழகிய வார்த்தைச் சித்திரங்களாகவும் சிறந்த பேனா ஒவியங்களாகவும் மதிக்கப்படுகின்றன. பேனா விற்குள் உள்ள மை கண்ணுக்குத் தெரியாதது போலத்தான் ஹைகூ வின் மறைபொருளும். மூன்று அடிகளில் படக்கென்று முடிந்து விடுவதால் அவற்றில் ஏதோ விடுபட்டுள்ளது அல்லது நிறைவு பெறாத கவிதை என்று கருதிவிடுவது சரியல்ல. பெளத்த மத சம்பந்தப்பட்ட விழாக்கள், விகாரை, புத்தர் தவிர மற்றபடி பாடுபொருள் அத்தனையும் பெரும்பாலும் இயற்கை சம்பந்தப்பட்டவையே அவை நிலா, கிள்வண்டு, பறவைகள், மேப்பிள் இலைகள், செர்ரி மலர்வது, காதல் உணர்வுகள், வாழ்வின் சோகங்கள் - என்பனவாம். ஜப்பானில் செர்ரி பூப்பது ஆண்டுக்கு 3 நாட்களே. நம் நாட்டில் குறிஞ்சி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கிறது. அதற்கே அலட்டிக் கொள்வதில்லை. குறுகியகாலக் குறிஞ்சியான 'செர்ரி" வெளேரென்று எங்கும் பூத்திருக்கும் அந்த மூன்று நாட்கள் நமக்குப் பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் எப்படியோ அப்படி ஜப்பானியர்களுக்கு இகேபானா' எனும் மலர் அலங்காரக் கலையில் ஜப்பானியர் புகழ் பெற்றவர்கள். செர்ரி மலர்வது (CHERRY BLOSSOM) குறித்து எத்தனை எத்தனை ஹைகூக் கவிதைகள். நம்பிக்கையுடன் வாழ் வாயாக! மலர்ந்து, மங்கி, வீழ்ந்திடும் இந்த செர்ரி மலர்போல [118) ஐசாக் கவிஞரின் இந்தப் பாடல் ஹைகூக்களில் முரண்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு. ஒருபக்கம், நம்பிக்கையோடு வாழச் சொல்கிறது மறுபக்கம் "மங்கி வீழ்ந்து விடும்" என்று சொல்கிறதே என்று மயங்க வேண்டிய