பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 12 தில்லை. செர்ரி அடுத்த ஆண்டு மீண்டும் பூக்கும், அதுபோலத்தான் வாழ்க்கையும் என்று நம்பிக்கை ஊட்டப்படுவது மறை பொருளாகும். பொதுவாக ஜப்பானிய ஹைகூக்களில் பருவ காலம் அல்லது பொழுது பற்றிய குறிப்பு இருக்கும். மேகங்களின் மலர்ச்சி மணி ஒலி யினா? அசகுசா? எனும் பாசோவின் கவிதையில் மணி ஒலி உணர்த்துவது மாலை வேளையை ஜப்பானிய பெளத்த ஆலயங்களில் மணி அடிப்பது மாலையில்தான்! பாசோவின் இன்னொரு ஹைகூ பழைய குட்டைக்குள்ளே தவளை குதித்தது க்ளக்- தண்ணி சப்தம் விமர்சகர்கள் கடைசி இரண்டு வரிகளைத்தான் பாசோ முதலில் பாடி இருப்பார், பின்னர் பழைய குட்டையைச் சேர்த்திருப்பார் என்று கருதுகின்றனர். பாஷோ தோட்டத்தில் நண்பர்களுடன் அமர்ந்திருக் கிறார். "சலக் என்று ஒரு சப்தம். ஆக, மெளனச் சூழல் கலைக்கப்பட்டு ஒரு எழுத்து மீண்டும் பழைய நிலை திரும்பிவிடுகிறது. தமிழில் கூட இது மாதிரி பழமொழி உண்டு. மொட்டைத்தாதன் குட்டையில விழுந்தான். குட்டை என்பது பாசி படர்ந்து கரை வழுக்கலாக நீர் சேறு போல உள்ள மிகச்சிறிய (Mini) குளமாகும். ஏற்கெனவே மொட்டையாக உள்ள தாதன் குட்டையில் விழுந்தான் அவன் உடம்பில் எதுவும் ஒட்டாது. எங்கள் ஊர் தெப்பக்குளம் பாசிபடர்ந்து பச்சையாக (வற்றிய சமயத்தில்) காணப்படும். ஆனால் முங்கி எழுந்தால் உடம்பில் பாசம் ஒட்டாது. வழுக்கி ஓடிப் போய்விடும்.