பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 123 பாஷோக் கவிஞர் பழைய குட்டையைச் சேர்க்க வேண்டிய காரணமே தனி அதிலே கல்லை எறிந்து பாருங்கள். சாதாரணக் குளத்தில் போல வட்டவட்ட அலைகள் தொடர்ந்து இருக்காது. தவளை உள்ளே தாவியதோடு இயக்கம் முடிந்துவிடும். ஒரு இயக்கம் (Movement) [5-535.jsmat அறிகுறியே அந்த கலக் என்ற சப்தம்தான். மோரிடாகி என்றொரு ஜப்பானியக் கவிஞரின் ஹைகூ இது. வீழ்ந்த மலர் கிளைக்குத் திரும்புகிறதா? வண்ணத்துப்பூச்சி கல்லைக் கண்டால் நாயக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக் காணோம் - என்று நாயைத் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்தைப் பற்றிப் புகழ்ந்து கூறுவார்களாம். வண்ணத்துப்பூச்சி பறப்பது மரத்தி லிருந்து பூமியில் விழுந்துவிட்ட பூவின் இதழ்கள் மீண்டும் மரத்துக்குத் திரும்புவது போலிருக்கிறதாம் உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் ஏதோ ஒர் உருவில் மீண்டும் இந்த உடல் உலவும் என்பதை உணர்த்தவோ? மண்ணில் விழுகிற மலர்கள் மக்கி உரமாகி மீண்டும் புதிய செடிகள் தோன்றத் துணை செய்யும் என்று உணர்த்தவோ? இப்படிப் பல சிந்தனைகளுக்கு ஊற்றாகிறது இந்த ஹைகூ. ஜப்பானியர்கள் ரசனை உள்ளம் கொண்டவர்கள். எதையும் வீணடிக்கமாட்டார்கள். அதனால்தான் கடலில் கூட வினயம் செய்ய முயல்கின்றனர். அரிசி கொட்டி வைக்கிற பாத்திரம் நம் வீட்டில் எல்லாம் இருக்கும் அரிசி இல்லை என்றால், இன்றைக்கு ஒரு பயனும் படியளக்கவில்லை. அரிசி இல்லையே - என்று கவலைப் படுவான் நம்மவன். ஆனால் ஜப்பானியர் எப்படி அந்த நிலைமையை எதிர்கொள்வர்? இதோ யாஷோக் கவிஞர் ஹைகூ மூலம் காட்டுகிறார்: இந்த வண்ணக் கிண்ணத்தில் மலர்களை வைப்போம் அரிசி தான் இல்லையே! [4] பொன் வைக்கிற இடத்தில் பூ வைப்பது என்பது நம்மவர் வழக்கு. ஆனால் அரிசி வைக்கிற கிண்ணத்தில் மலர்களை வைப்பது என்பது