பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 124 ஜப்பானியர் ரசனை உள்ளம். அரிசி தான் இல்லையே என்பதி, ஏக்கம் தொனிக்கிறது. ஆனால் அதற்காகச் சோர்ந்துவிடவில்லை. அதனால்தான் அது, அரிசிக் கிண்ணம் என்பது முடிவில் சொல்லப் படுகிறது. வறுமையில் செம்மை என்பார்கள். வறுமையிலும் ரசனை வரண்டு விடுவதில்லை. முரண்கள் இயற்கையின் நியதி இயற்கையின் ஒரு பருவம் ஒருவனுக்கு இன்பம் என்றால் இன்னொரு வனுக்கு துன்பம் இப்படிப்பட்ட முரண்களை அழகாகச் சித்திரிக்கின்றன. ஹைகத் கள். இதோ பாஷோ தரும் ஒருமுரண் நிலை ஹைகூ: வசந்தம் போகத்தான் வேண்டுமா? பறவைகள் அழுதன் மீன்களின் - வெளிறிய கண்களில் நீர் [14] மழைக்காலம் வர உள்ளது. பறவைகளுக்குத் துன்பம்; மீன்களுக்கோ இன்பம். குளம், குட்டை வறண்டு போகாமல் இருக்கும் முரண்பட்ட நிலைகளே உலக நடப்பு என்பதை உணர்த்தும் தத்துவ தரிசனம். மனிதர்கள் 'சென்ட் போட்டுக் கொள்வதைப் பார்த்திருக் கிறோம். அதுவும் ஆடவர்தானே போட்டுக் கொள்வர் பறப்பன வற்றில் பெண் 'சென்ட்” போட்டுக் கொள்கிறாள். இத்தனை ரசமான செய்தி ஒரு சின்னஞ்சிறிய ஹைகூவில்தான்! வண்ணத்துப் பூச்சிச் சீமாட்டி சிறகிற்கு மணம் ஊட்டுகிறாள் மலர்களில் அமர்ந்து ஜப்பானியன் வாழ்வில் மட்டுமல்ல சாவிலும் செர்ரி இடம்பிடித்துக் கொண்டுள்ளது. 'சாமுராய்' என்போர் நம் நாட்டு சத்திரியர் அல்லது போர் மறவர் போன்ற மரபினர். ஆஸ்துமோரி என்பவன் ஒரு சாமுராய் இளைஞன். போரில் இறந்துவிடுகிறான் அவனது கல்லறையைக் காட்டுகிறார். ஷிகி - ஹைகூக் கவிஞர் ஆஸ்து மோரியின் கல்லறை! இங்கு ஒரு மரம் கூட நிற்கவில்லையே செர்ரி மலர் சொரிய