பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் . 127 நிரந்தரமாக உள்ளது என்று ஏளனம் செய்வது போல மறை பொருளாய்த் தொனிக்கிறது புதுச் செருப்பின் கடிக்குப் பயந்து கால்கள் முழுக்க முட்கள் வாழ்க்கை (எங்.அறிவு மணி - முகில் 6.92) புதிய அனுபவங்களுக்குப் பயந்தால் வாழ்க்கையில் முன்னேற்ற மில்லை என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஏனிந்த அம்மணம் புத்தாடைகளுக்காக இலையுதிர் காலம் (செந்தமிழினியன்ட -காந்தடி12/94) ஹைக்கூவிற்காக துணிந்து இருமாத இதழாக நடத்தப்படும் 'கரந்தடி'யில் வெளிவந்தது. வசந்தகாலம் வரவிருக்கிறது என்பதை மறைபொருளாகச்சுட்டி அதற்காகவே இந்தக் கோலம் என்று சுட்டும் ஹைக்கூ ஐப்பானிய ஹைகூ போலவே இங்கும் பருவகாலங்களை குறிப்பிட்டுச் சொல்லும் ஹைகூக்கள் வரத் தொடங்கிவிட்டன. இதுதவிர நடை என்ற இதழில் ஹைகூ வெளிவந்துள்ளது. கவிஞர் ரகுமானின் அருமையான ஹைகூ கவிதைகள் அவரது தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. ஹைகூவை இங்கு பரப்பியதில் அவருக்குக் கணிசமான பங்குண்டு.