பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் 134 அமிர்தம் மூர்த்தியிடம் தன் காதலை வெளிப்படுத்தும் வேறொரு கட்டம்; “எனக்கு மட்டும் உங்கமேலே ஆசையில்லேண்ணா சொன்னே..; உங்க துணிகளைத் துவைக்கும்போது ஒரு ஆனந்தம், உங்களுக்கா, கடைக்குச் செல்லும்போது ஒரு சந்தோஷம், உங்களைக் கூடிப்பாடச் சொன்னால் கூத்தாடுவேன். உங்களுக்காக நான் என்னை; கல்யாணம் செய்து கொள்வது இந்தப் பூமி ஏற்குமா இங்கே உன்னதமான காதல் ஒரு தேவகானம்போல் சொலிக்கிறது. இங்கே எந்த புனைந்துரையும் இல்லை. இங்கே நிலா அல்லி, சூரியன், தாமரை இவற்றிக்கு வேலை இல்லை. அமிர்தம் ஒரு வேலைக்காரி, அந்தப் பாத்திரத்தின் இயல்புக்கேற்ப உரையாடல் அமைந்தி ருக்கிறது! உவமைகளையும் உருவகங்களையும் கூட அண்ணா பாத்திரங் களுக்கேற்பவே பயன்படுத்துகிறார். சொர்க்க வாசலில் பாவமன்னிப்புச்சீட்டு என்ற பெயரில் மக்களைக் கொள்ளையடிக்கும் அருமறையானந்தருக்கு உடந்தை யாக இருக்க மறுக்கிறான் மதிவாணன், சொர்க்கவாசல் திறப்பு விழாவில் மன்னர் வற்புறுத்தியும் பாட மறுக்கிறான். 'முடியாது வேந்தே மான் இரத்தம் குடிக்காது வேங்கை போல! என்கிறான் பாடமறுப்பதால் அவனை நாத்திகன் என்று மன்னனும் மடாதிபதியும் குற்றம் சாட்டுகின்றனர். 'நல்லறிவை நாத்திகம் என்றீர். வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் வித்தியாசம் தெரியாத குருடரைப் போல: என்று பதிலுரைக்கிறான் மதிவாணன். இவை ஒரு கவிஞனின் பேச்சு நடைக்கேற்ற உவமைகள். ஒர் இரவு நாடகத்தில் திருடன் ரத்தினம் தன்னோடு சேரிப் பகுதியில் நடந்து வரும் டாக்டரிடம் சேரியில் வாழும் ஏழை