பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 136 'அவறா சொன்னாரு.... மாப்பிள்ளைக்கு கொஞ்சம் வயது யிடுச்சி என்றார். "அப்படி ஒண்ணும் வயசாயிடலிங்க" "ஜம்பதுக்கு மேலே ஐந்தோ பத்தோதான் அதிகம் இருக்கும். 'சரிதான்; போகிற வயசு...' ஐம்பதுக்கு மேலே என்னும் போதே நமக்கு அதிர்ச்சி, அதற்கும் மேலே ஐந்தோ பத்தோ அதிகமாம். போகிற வயசாம். போகிற போக்கில் அண்ணா நம்மைச் சிரிக்க வைக்கிறார். வாதத்திற்கு வாதம், தாக்குதலுக்குத் தாக்குதல் என்பதை Retort என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. வழக்கு மன்றத்தில் வழக்கறிஞர்கள் ஒருவருக்கொருவர் மோதுவதைப்போல் பாத்திரங் களை மோத விடும்போது, ஏட்டிக்குப் போட்டியாகப் பேசவிடும் போது விறுவிறுப்பும் வேகமும் உண்டாகும். வேலைக்காரி திரைப்படத்தில் இந்த உத்தி பொருத்தமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேலைக்காரி அமிர்த்தத்தை தன் மைத்துனன் பரமு தொட்டான் என்றும் வார்த்தையால் சுட்டான் என்றும் கேள்விப்படுகிறான் மூர்த்தி. மூர்த்தியின் கோபத்தைக் கிளற வேண்டுமென்றே பரமு அவளிடம் அப்படி நடந்து கொண்டிருக் கிறான். உண்மையில் அவனுக்கு அவள் மீது ஆசையில்லை. பரமுவைத் தனியாக அழைத்து மூர்த்தி புத்தி சொல்லுகிறான். பரமுவோ "அவள் என்ன வேலைக்காரிதானே' என்று ஏளனம் பேசி கோபத்தை மேலும் கிளறுகிறான். 'பரமு! கேலி செய்யவேண்டாம். கேள் இதை. உன்னை அவள் ஒரு துரும்பென மதிக்கிறா' என்கிறான் மூர்த்தி. 'சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று நீ அவனுக்குச் சொல்வதுதானே' என்று தன் மீது வீசப்பட்ட துரும்பை மிகவும் லாவகமாகக் கையில் பிடித்து சிலம்பாட்டம் ஆடுகிறான் பரமு. மூர்த்தி விடுவதாக இல்லை. மீண்டும் தன் காதலி மீது பழிமொழி வீசிய பரமுவை நோக்கி 'உனக்குக் கிடைக்கமாட்டாள் அவள். கிட்டாதாயின்லெட்டெனமற என்ற பழமொழி தெரியுமா உனக்கு?" என்கிறான். பரமு சற்றும் சளைக்கவில்லை.