பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 137 'ஆடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்று பழமொழி இருக்கின்றதே. அது தெரியுமா உனக்கு?' என்று பழமொழிப் படிதான் நடக்க உத்தேசம்' என்று மூர்த்தி மோதுகிறான். அண்ணாவின் உரையாடல்களில் இப்படி எத்தனையோ அழகுகள் ஆட்சி செய்கின்றன. பழந்தமிழ் இலக்கியம் முதல் பாரதிதாசன் இலக்கியம் வரை படித்துச் சுவைத்த உள்ளம் அவர் உள்ளம். ஆதலால் அந்த இலக்கியக் காட்சிகளையும் கவிதை வனப்புகளையும் தம் உரையாடல் களில் நளினமாக, நயமாக வெளிப்படுத்தியுள்ளார்.

திரைப்பட பாட்டும் பேச்சும் செய்பவர்

இருப்பிடம் என்றன்றுற்களின் இருப்பி - என்று பாரதிதாசன் தம்மைப்பற்றி பெருமித்ததோடு ஒருமுறை பேசினார். அண்ணாவின் உரையாடல்களிலும் அவர் அரியணை ஏறி அமர்ந்திருப்பதைக் காணமுடியும். 'சாலையோரத்திலே சில வேலையற்றதுகள் அந்த வேலையற்றதுகளின் மனத்திலே விபரீத எண்ணங்கள். வேந்தே இதுதான் காலக்குறி என்று மதிவாணன் சொர்க்கவாசலில் அரசனை நோக்கி வீர உணர்ச்சியோடு பேசும் பேச்சு புரட்சிக் கவியில் உதாரன் பேசும் பேச்சை நினைவு படுத்துகிறது. வேஷமணியாத வேதாந்தி-மோடி செய்யாத மாதுஜோடி இல்லாத மாடப்புறா - சேடி இல்லாத ராஜகுமாரி இருக்க முடியாதாம்.' அண்ணாவின் மிகப் பிரபலமான வேலைக்காரி வசனம் 'பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல் பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ? என்ற பாரதிதாசனின் கவிதை வரிகளை நினைவுபடுத்தும். பாரதிதாசன் அண்ணாவைப் பாதித்ததைப் போலவே, அண்ணாவின் திரை உரையாடல்கள் பலரையும் பாதித்திருக்கிறது என்று பட்டியல் போட்டுக்காட்ட முடியும். கலைஞர் மு. கருணாநிதி, ஏ.எஸ்.ஏ. சாமி, அரங்கண்ணல், சக்தி கிருஷ்ணசாமி ஏ.பி. நாகராஜன் போன்றோர் அந்தப் பட்டியலில் நிச்சயம் இடம்பெறுவர்