பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீராகட்டுரைகள் ; 139 போராடிக் கொண்டிருக்கும் மக்கள் மெதுவாக எழுந்து நின்று கைகளை உயர்த்தி வானத்தை நோக்கி சூரியனை எட்டிப் பிடிப்பதுபோல் அமைக்கப்பட்ட கடைசிக் காட்சி இக்காட்சியில் திரையின் அடிப்பகுதியிலிருந்து மேலே மெதுவாக 'எழுந்து நில்லுங்கள்" என்ற வாசகம் தெரிய ஆரம்பிக்கிறது. படம் முடிந்து விட்டது என்று எழுந்து நிற்கும் மக்கள் அந்த வாசகத்தால் ஒரு புத்துணர்ச்சிக்கு ஆட்படுகின்றனர். மிருணாள் சென்னிடம் ஒரு விமர்சகர், சுபம் வணக்கம் என்று போடாமல் எழுந்து நில்லுங்கள் என்று கடைசியில் போடுவது ஏதோ பிரச்சாரம் செய்வது போல் உள்ளது என்றாராம். மிருணாள் சென் மறுக்கவில்லை. அண்ணா தன்னை ஒரு பிரச்சாரகன் என்பதை மறுக்கவில்லை; கலை கலைக்காகவே என்ற வாதத்தை ஏற்கவில்லை. அதனால் தான் வேலைக்காரி திரைப்படம் முடியும்போது வேதாசல முதலியார் 'பணத்திமிரும் ஜாதித் திமிரும் ஒழியவேண்டும் என்றும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் நாட்டு மக்களுக்கு உரைப்போம்" என்கிறார். திரையிலும் எல்லா முகங்களும் மறைந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமந்திர வாசகம் ஒளிவீசுகிறது. 制 &