பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னப்ப பாரதியின் நாவல்களில் உவமை நயம் கலை கலைக்காகவே என்ற தத்துவம் தகர்க்கப்பட்டு மக்களுக்காக-மக்களின் வாழ்க்கைக்காக என்ற மாற்றம் மேலை நாடுகளில் வந்தபின் பாட்டாளி வர்க்க இலக்கியம் பெருகத் தொடங்கியது. அதன் தாக்கம் தமிழிலும் எப்போதோ ஏற்பட்டு விட்டது. அதில் முன்னேர் நடத்தியவர்களில் ஒருவராக நாம் நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியைக் காண்கிறோம். கு.சின்னப்ப பாரதியின் பெரும்பாலான நாவல்களும் பாட்டாளி வர்க்கத்தினரின் பாடுகளைச் சித்திரிப்பனவாகவே அமைந்துள்ளன. 'தாகம்" (1975) தாழ்த்தப்பட்ட பண்ணைத் தொழிலாளரைப் பற்றிய நாவலாகும். 'சங்கம்’ (1985) மலைவாழ் பழங்குடியினர் கந்து வட்டிக்காரர்களையும் வனத்துறை அதிகார வர்க்கத்தையும் எதிர்த்து ஒன்றுபட்டுப் போராடியதை விவரிக்கும் நாவலாகும். 'சர்க்கரை (1991) நாவல் சர்க்கரை ஆலைத் தொழிலாளர் படும் பாட்டையும் அதேசமயம் கரும்பு விவசாயிகள் ஏமாற்றப்படுவதை யும் சித்திரிப்பதாகும். உழைப்பாளர் நலம் போற்றும் மேற்கண்ட நாவல்களில் உவமைகள் உழைப்பாளர் உலகுடன் ஒட்டி உறவாடுவனவாகவே அமைந்துள்ளன. சில நாவல்களில் வருவது போல அதீதத் தன்மை கொண்டவை அல்ல. உழைப்பாளர் நிலையில் நின்று சிந்திக்கும் நாவலாசிரியர்க்கு சூரியனும் ஒரு உழைப்பாளியாகத் தோன்றுகிறான். ஒரு உழைப்பாளியின்துன்பத்தை இன்னொரு உழைப்பாளி தானே உணர முடியும்? அதனால்தான்,