பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 141 'நாள் முழுவதும் உழைப்பாளர் மக்கள்படும் சொல்ல வெண்ணத் துன்பத்தைக் கண்டு இதயங்குமுறி முகங்கன்றிச் சிவந்து விட்டது போல சூரியன் செவ்வொளியை மேற்கு வானில் தூவிக் கொண்டு மறைந்தான்' (தாகம்-ப. 56) என்று தாகம் நாவலில் உழைப்பாளர் படும்துன்பத்தை மகங்கன்றிச் ஒவந்த சூரியனின் செவ்வொளிக்கு ஒப்பிடுகிறார், சின்னப்ப பாரதி. 다. திரைப்படங்களில் திரும்பத் திரும்ப வரும் கனவுக் காட்சிகளை பலமுறை கண்டு உழைப்பாளர் சலிப்படைவதில்லையே, ஏன்? அவர்களது காதலும் வாழ்க்கையும் பாரதி சொல்வது போல கனவு போலத் தோன்றுவதால் கனவு காணவே ஆரம்பித்துவிடுகிறார்கள். அதன் பிரதிபலிப்பு தங்களுக்குள் நையாண்டியாகப் பேசி மகிழ்கிறார்கள். இவர்களின் இந்தப் பேச்சைதிரு. பாரதி குறிப்படும் போது, 'வாலிப வயதின் கனவுகள், எதிர்பார்ப்புகள் யாவும் அவர்களுக்கு நெடுந்துர லட்சியமாக மிரட்டிக் கொண்டிருந்தன. மிட்டாய் சாப்பிடும் குழந்தையைப் பார்த்து, அதை வாங்கிச் சாப்பிடச் சக்தியற்ற குழந்தை கைவிரலைச் சூப்பி இன்பம் காணுவது போல இருந்தது, அவர்களின் பேச்சு.' (சர்க்கரைப.220) என்று உவமிக்கிறார். ஏழைக் குழந்தைக்கு மிட்டாய் வாங்க ஏது காசு? ஆனால் தன் விரலுக்கு வேண்டியதில்லையே காசு. காசு கொடுத்துப் பெற முடியாத குழந்தைக்கு எது சாத்தியமோ அது உவமையாகிறது. ஏழைகளின் வாலிப வயதின் கனவுகள் - எதிர்பார்ப்புகளுக்கு நடைமுறை சாத்தியமானவையே உவமை யாகும்போது எளிமையும் இயல்புத்தன்மையும் கதைக்குப் பொலிவூட்டுகின்றன. முஷ்டி உயர்த்திய கையைத் தொழிலாளர் ஒன்றுபட்ட சக்தியின் சின்னமாக, புத்துலகு சமைக்கும் கரங்களின் வலிமைக்கு எடுத்துக் காட்டாகக் கொள்கிறார்கள். அதனால்தானோ என்னவோ, பாரதி.