பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 143 காபிச்செடி மலைப்பயிர். அதற்கு மாசி மாதத்து மழை உகந்தது. மலைவாழ் மக்களைப் பற்றிய சித்திரிப்பில் இச்செடி எப்படி இடம்பெறுகிறது என்று பார்க்கலாம். பொதுவாக மகிழ்ச்சியால் முகம் மலர்வதை ஆதவனைக் கண்ட தாமரை மலர்வதைப்போல என்றெல்லாம் உவமிப்பார்கள். இங்கே மலைவாழ் மனிதனின் முகமலர்ச்சியை வர்ணிக்க வந்த பாரதி, 'திருமனின் முகம் மாசி மாதத்து மழையைக் கண்டதும் மொட்டவிழ்ந்து பிரகாசிக்கும் காப்பிச்செடியைப் போல பொங்கிப்பூரித்தது.: (சங்கம்-ப.27) என்று மொட்டவிழ்ந்து பிரகாசிக்கும் காபிச் செடிக்கு உவமிக்கிறார். தமிழ்நாட்டில் , சில நாட்டுப்புற வட்டாரங்களில் வாழ்கின்ற தாய்மார்கள் விடாமல் நச்சரித்துத் தொல்லை தரும் தம் குழந்தை களைப் பார்த்து, சனியனே, ஏன் சீலைப்பேனாப்பிடுங்கறே?" என்று திட்டுவார்கள். கூந்தலிலே குடியிருக்கும் பேன் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறோம். இதென்ன சீலைப்பேன் என்ற ஒன்று என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? சேலை மறைப்பதனால், வெளிச்சம்படாத இடுப்புப் பகுதியில் ஆடை இறுக்கு வதால் வெள்ளைத் தழும்பு ஏற்பட்டு அழுக்குச் சேர்ந்திட அதில் உண்டாகும் பேனுக்கு சீலைப்பேன் என்கின்றனர். இது மேனியில் ஒருவித நமைச்சலையும் எரிச்சலையும் தரும். குளிர் நடுக்கும் மலைப் பகுதியில் வாழ்கிற பழங்குடிகள் மாற்று உடைகள் இல்லாத நிலைமையில் அழுக்கு நீங்கத் தினமும் குளிப்பதென்பது இயலாது. இந்த நிலைமையினால் பழங்குடித் தாய்மார்களுக்கு சீலைப் பேன் என்பது வெகு பரிச்சயம். ஆனால் பரிச்சயமில்லாத நமக்கு பரிச்சயமான ஒன்றுடன் ஒப்பிட்டுச் சொல்லும் முறையில், சங்கம் நாவலில் நாச்சாயி திருமியிடம் கூறுகிறாள், “மழபேஞ்சாகொய்யாப் பழத்துலேபுளு நெளியறாப்ளே மஞ்சு மூடுனா சீலைப்பேனுதா உற்பத்தியாயிடுது. நமக்கென்னதெனம் தெனம் துணி கசக்கிக் கட்டிகிற மாதிரியா இருக்கு.” (சங்கம்-ப.126.1)