பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிரா கட்டுரைகள் : 145 காட்சியாக்கி, அந்தக் காதுகளை வாடி வதங்கிக் கிடந்த மொச்சை இலைகளுக்கு உவமிக்கிறார் பாரதி. திருமனும் திருமியும் கருமொச்சைக் காட்டுக்குள் அமர்ந்து களை பிடுங்கிக்கொண்டிருந்தனர். கண் விழிக்காத குட்டிகளை இழந்த பெண் நாயின் துவண்டு மடிந்து தொங்கும் காதுகளைப் போல மொச்சைச் செடிகளின் இலைகள் வாடி வதங்கிக் கிடந்தன. பாண்டி நாட்டுக்கு வந்த கவிச்சக்கரவர்த்தி கம்பரின் அனுபவங்கள் பற்றி நாட்டார்கதைகள் பல வழக்கில் உள்ளன. ஒருநாள் மாலை வயலோரம் வந்த கம்பர் ஏற்றக்காரன் ஒருவன் 'மூங்கில் இலை மேலே தூங்கும் பனிநீரே!” என்று பாடியதைக் கேட்டுச் சுவைத்து நின்றவர் அடுத்த அடியைக் கேட்க ஆவலாய் கிணற்று மேட்டைப் பார்க்க, ஏற்றக்காரன் வீட்டுக்குப் போய் விட்டான். அடுத்த வரியைக் கேட்க அடுத்த நாள் காலை அவ்விடத்திற்கு வந்த கம்பர் 'தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே!" என்று ஏற்றக்காரன் முடிக்கக் கேட்டு அசந்து போய்விட்டாராம். கொல்லிமலையில் மூங்கில் புதர்கள் மீது தூங்கும் பனிநீர் கதிரவன் வருமட்டும் எப்படி மின்னுகிறதாம்? பாதரசத்துளிகளாக! ஆம், பாரதியின் பார்வையில், வெள்ளிச்சரத்தை ஊதிவிட்டது போன்று மூடுபனிப் புதர்கள் சோலைகள் வயல்வெளிகளினுடே சோவென்று லோசக இரைந்து கவிந்தது. பாதரசத் துளிகள் போன்று இலைகளிலும் தளிர்களிலும் புல்பூண்டுகளிலும் படிந்த நீர்த்தவலைகள் மெதுவாகச் சொட்டின." (சங்கம் - ப.18) என்றவாறு அவை பாதரசத்துளிகளாக ஆங்காங்கே படிந்தன. பனிக்காலம் போய், வந்தது வசந்தம். அப்போது துளிர்த்த இளந்தளிர்கள் எப்படி இருந்தனவாம்? அன்றாடம் விவசாயிகளின் வீட்டில் வலம் வரும் கோழிக்குஞ்சுகளின் மெல்லிறகுகளை நினைவூட்டு கின்றனவாம்.