பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 148 இரும்பு மனிதரைத் தட்டிக் கொடுத்த அவர் வேறு யாருமில்லை, இந்த நாளின் நாயகர்.... டாக்டர் இராதாகிருஷ்ணன் தான். 다 நேற்றைய இந்து இதழில் டாக்டர் இராதாகிருஷ்ணன் பற்றி atopg|ILL(\airst g(551 Gaoguìsi (Philosophy, the breath of his life, by P. Nagaraja Rao, Hindu, 4.9.88) o Girst gèG gemau urrer செய்தியைத்தான் இங்கே குறிப்பிட்டேன். ஸ்டாலினை ஒரு மாணவரைப்போல் கருதி அன்புடன் தடவிக் கொடுத்த டாக்டர் இராதாகிருஷ்ணன் ஆசிரியராய்- பேராசிரியராய் இருந்தவர். டாக்டர் இராதா கிருஷ்ணன் மட்டுமல்ல, அவரைப் போல் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் சாகிர் உசேன் போன்ற உன்னதமான மனிதர்கள் செய்த அதிஉன்னதமான தொழில், அவனி போற்றும் ஆசிரியர் தொழில் என்று புகழ்கிறோம். ஆசிரியர் செய்வது தொண்டா, தொழிலா என்று எந்த நீதி மன்றத்திலும், பட்டி மன்றத்திலும் விவாதித்து விடைகாண வேண்டிய அவசியமில்லை. தொழில்தான். 'தொழில்தான்' என்று சொன்னால் ஏதோ கொஞ்சம் மாற்றுக் குறைந்ததுபோல் நம் பார்வைக்குத் தெரிகிறது. நமக்குத் தொழில் கவிதை' என்று பாரதி பாடினான். கவிதையை கவிஞரை கோபுரத்தில் ஏற்றி வைத்த காலம் மாறிவிட்டது. ஆயிரத்தெட்டுத் தொழில்களில் அதுவும் ஒன்று.... ஆசிரியமும் ஒன்று. 'தொண்டு செய்யும் அடிமை என்று பாரதி பாடிய இன்னொரு வரியும் தொண்டு செய்து கொண்டிருப்பவனுக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்று அம்பலப்படுத்திவிட்டால் இப்போது தொழில்' என்று சொல்வதுதான் சரி என்று புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. சங்கம் அமைத்துத் தொழிலாளர்களுடன் இணைந்து போராடுவது நியாயம் என்ற கருத்து நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. இருந்தும், ஆசிரியர்கள் போராடலாமா, என்று சில இதழ்கள் பத்திரிகைகள் அவ்வப்போது எழுதத் தவறுவதில்லை..... அந்த