பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

净 மீரா கட்டுரைகள் : 149 இதழ்களில் அப்படி எழுதும் பத்திரிகை ஆசிரியர்கள் முதலாளியின் விருப்பப்படி போராட்டத்தைக் கண்டிப்பார்கள். விலைவாசி உயர்வால் தானே ஊதிய உயர்வு கேட்கிறார்கள் , போனஸ் கேட்கிறார்கள் என்று எடுத்துரைத்தால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதே நேரத்தில் அவர்கள் மட்டும் 'பத்திரிகைக் காகிதம், மை விலை ஏறிவிட்டதால் இன்று முதல் முப்பது காசு கூடுதலாக உயர்த்தப் பட்டுள்ளது. வாசகர்கள் இதைப் பாதிப்பாகக் கருதமாட்டார்கள் என்று நம்புகிறோம்" என்று முதல் பக்கத்தில் அறிவிப்புச் செய்வார்கள். பத்திரிகை ஆசிரியர்களுக்கு உள்ள நெருக்கடி பள்ளி ஆசிரியருக்கு இல்லையா? இன்று பத்திரிகை அவதூறு பற்றி எதிர்த்துக் குரல் கொடுக்கின்ற போராடுகின்ற பத்திரிகை ஆசிரியர்கள் சிலர் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் போராடும் போது தூய்மை வாதம்' பேசியது, பேசுவது முறையா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். ஒரு சில பத்திரிகை ஆசிரியர்கள் எழுத்தாளர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் ஆசிரியர்களைச் சமூகத்தில் ஒர் அங்கமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். ஏணி தோணி என்று உபசார வார்த்தைகளை உதிர்த்தால் போதும் என்ற பழைய தலைமுறை யிலிருந்து விலகி வந்து விட்டார்கள் ஆசிரியர் ஏணியாக... இருந்து என்ன பயன்? அவர் ஏறமுடியவில்லையே... அவர் தோணிதான். ஆனால் அவர் கரை சேர முடியவில்லையே' என்று ஆசிரியர்களின் ஏழ்மையை, வறுமை வாழ்க்கையை போராட்டத்தைத் தங்கள் படைப்புகளில் சித்திரிக்கச் செய்கிறார்கள். 'வாக்குக் கற்றவன் வாத்தியார் என்று சொன்னதை எப்போது 'வக்கற்றவன் வாத்தியார் என்று சமூகம் சொல்லத் தொடங்கியதோ அன்றைக்கே ஆசிரியர்களின் எதார்த்தநிலை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டு விட்டது. நான் ஒரு கல்லூரி ஆசிரியன். ஏழு மாதங்களுக்கு மேல் ஊதியமில்லாமல் இருந்தபோது - பொறுக்க முடியாத நிலை ஏற்பட்டபோது போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. என்னைப் போல் அவதிப்படும் ஆசிரியர்களுக்காகச் சங்கம் அமைக்கும் எண்ணம் ஏற்பட்டது. இன்று பலகட்டங்களைக் கடந்து பல சாதனைகளைப் படைத்துள்ளது கல்லூரி ஆசிரியர் இயக்கம். இன்று எவ்வளவோ தூரத்துக்கு முன்னேறி வந்திருக்கிறார்கள் கல்லூரி ஆசிரியர்கள்.