பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 151 நிலையத்துக்குப்பாய்ந்து செல்லும் வழியில் காணலாம். சிலசமயம் சைக்கிளில், சில சமயம் கால்நடையாக - எப்படிப் போனாலும் 'விறுவிறு' என்று போவார். திரும்பும்போது யாரையாவது பார்த்தால் பார்ப்பதோடு தீர்ந்தது. அந்தக் கடையிலோ இல்லை கம்பெனியிலோ உள்ளே சென்று உட்கார்ந்து பேசி மனிதரைப் போர் அடிக்கிற தன்மை அவரிடமில்லை. ஏற்றுக்கொண்ட •ಣ எதுவானாலும் ஒழுங்காக நடத்துவார்" (பேராசிரியர் பக்.31 பேராசிரியரின் அறிமுகம் அவரை விருதுபெற வேண்டிய ஒரு நல்லாசியராகத்தான் காட்டுகிறது. ஆனால் அவர் விருது பெறுவதை விட, உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தை தேவைக்கு ஏற்ற சம்பளத்தைப் பெறவே விரும்புகிறார். பலன், போர்க்குண ஆசிரியராகிறார். வறுமைக் கோட்டைத் தாண்ட முடியாத ஆசிரியர் பூமத்திய ரேகை என்னும் நிலநடுக்கோட்டைப் பற்றி நிம்மதியாக எப்படிப் போதிக்க முடியும்? நாவலின் தொடக்கத்தில் லோப்பஸ் கல்லூரி முதல்வரைச் சந்தித்து ஊதிய உயர்வு கோருகிறார்; முதல்வரோ 'நம்மை விடக் குறைந்த மாத வருவாயுள்ளவர்கள் நன்றாக வாழும் சாமர்த்தியத்தையுடையவர்களாக இருக்கிறார்கள்' என்று நயமாகக் கூறுகிறார். சிக்கனமாக இருக்கவேண்டும் என்று சாமர்த்தியமாகக் கூறுகிறார். நிர்வாகத்தின் கஷ்ட நஷ்டங்களை 'உள்ளம் உருக விவரிக்கிறார். லோப்பஸ் ஆறேழு குழந்தைகளின் தந்தை. அவர் குழந்தைகளின் சின்னச் சின்ன ஆசைகளைக்கூட அவரால் நிறைவேற்ற முடிய வில்லை. பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் புத்தாடை உடுத்தி வெளியே புறப்படும் போது லோப்பஸின் குழந்தைகள் பொருமுகின்றன. 'நமக்கு இப்படிப் புதுச் சொக்காய் வாங்கிக் கொடுக்கிறாரா? என்ன அப்பா நம்ம அப்பா?' என்கிறது, ஒரு குழந்தை. "நம்ம அப்பா கையிலே காசு இல்லை. கிடைச்சதும் வாங்கித் தருவார்' என்று இன்னொரு குழந்தை பதில் சொல்கிறது. இந்த சமாதானம் மூத்த பையனுக்குப் பிடிக்கவில்லை; அவன் வெடிக்கிறான்; காசு இல்லாமலிருந்தா எதுக்காக அப்பாவாகணும்? காசு இல்லாம லிருந்தா நான் அப்பாவாகமாட்டேன்' (பக்.58) பெண்ணின் வயதையும் ஆடவரின் சம்பளத்தையும் கேட்பது பண்பாடல்ல என்று மேலைநாட்டில் ஒரு பழமொழி உண்டு. அந்தப் பண்பாட்டைக் காப்பாற்ற லோப்பஸ் தவறவில்லை.