பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 153 முண்டசேரியைப் போல என் பார்வையில் பட்ட ஒரு தெலுங்கு எழுத்தாளர் பாமிடிபாடி காமேஸ்வர ராவ். இவரும் ஆசிரியராய் இருந்தவர்; ஆசிரியரைப் பற்றி எழுத உரிமை கொண்டவர். இவரை ĝñu Bansågs suureri (Serious Humorist) என்று தெலுங்கு விமர்சகர்கள் குறிப்பிடுகிறர்கள். ஒரு பள்ளி ஆசிரியனின் ஒரே சொத்து அவன் மனைவியும் அவனும் அவன் மனைவியோ அசையாச் சொத்து. அவனோ அசையும் சொத்து. ஆண்டு வருமானமோ ஒரு பெண் குழந்தை சில சமயங்களில் @JiilqijL1T5.... @JiiaoLUT% (The Schoolmaster's Sole property is his wife (immovable) and himself (movable) His annual income is a Female child, some times twins). - இப்படி ஒரு பள்ளி ஆசிரியர் பற்றி அவரது இணைபிரியாத வறுமை நிலை பற்றி சில அங்கத வரிகளில் அழகாகச் சித்திரிக்கிறார் காமேஸ்வர ராவ். 다. தமிழில் கவிஞர் சிற்பி செதுக்கியுள்ள ஆசிரியச் சிற்பம் அற்புதமான படைப்பு. ஆசிரியரின் மெலிந்த, நலிந்த நிலையை. "மலிவுப் பதிப்பா ஆகிப் போச்சு வாத்தியாரு வேலை: 'நாட்டிலெங்கும் இளைத்த ஆண்டி வாத்தியாரு பாவம்' என்று அனுதாபத்தோடு விவரிக்கிறார். ஆண்டி என்றாலே சோற்றுக்குப் பிச்சை எடுத்தாக வேண்டும். இவரோ பஞ்சத்துக்கு ஆண்டி அல்ல; பரம்பரை ஆண்டி அதனால் தான் இளைத்த ஆண்டியாய்த் தோற்றம் அளிக்கிறார். சந்தனம் என்றெழுதி விட்டால் கை மணப்பதில்லை சாகு மட்டும் ஆசிரியன் வாழ்க்கை பெருந்தொல்லை என்றும் திருமண மார்க்கெட்டில் இவரைப் பெண்களும் மதிக்காது என்றும் மார்க்கு போடும் சீசனிலே ஏதோ கொஞ்சம் இராச்தி ಗ್ಲಲ್ಲ நாளில் இவரு வெத்து வேட்டெழும் துப்பாக்கி என்றும் சிற்பி ஆசிரியரின் பரிதாப நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார். 'எல்லோருக்கும் ஆசிரியன் எட்டி உதைக்கும் பந்து' என்று சிற்பி சொல்லும்போது அதில் மறைந்திருக்கும் உள்ளார்ந்த பொருளை