பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 156 கோமல் பார்வையில் ஆசிரியர் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறார். கிராம மக்களின் எழுச்சிக்குத் தூபமிடும் புரட்சிக்காரராக அவரை உருவாக்கிவிடுகிறார். வெள்ளைக்காரன் போன நினைவில் தனக்கு வெள்ளைச்சாமி என்று பெயர் வைக்கப்பட்டதாகவும் சுதந்திரம் வந்த அன்று பிறந்ததாலோ என்னவோ சுதந்திர இந்தியா மாதிரி நாய்பட்ட பாடு படுவதாகவும் வெள்ளைச்சாமி என்ற பாத்திரம் பேசுவதைக் கேட்ட போது, 'நீ சொல்றத பார்த்தா, சுதந்திரத்துக்கு முன்னாலே பொறந்தவங்கள்லாம் நல்லா இருக்கிற மாதிரி பேசறியே. நான் சுதந்திரத்துக்கு முன்னால பிறந்தவன். வெறி நாய் பட்டபாடு படறேன்” என்னும் போதும் 'இந்த சஹாரா பாலைவனத்திலே ஒரு ஒராசியர் பள்ளி. அதுக்கு நான் வாத்தியாரு நண்டு பிடிச்ச நேரம் போக மத்யான நேரத்துக்கு பசங்க வருவாங்க. சோத்தைத் திண்ணு போட்டு போவாங்க' என்று கூறும்போதும் வாத்தியார் வைத்தியலிங்கத்தின் கூர்மையான கேலியும் கிண்டலும் நம்மை வசப்படுத்தி விடுகின்றன. 'இந்தியனுடைய இரண்டு கைகள் லஞ்சம் வாங்கும். வரதட்சணை வாங்கும். பிறத்தியான் கழுத்தை நெறிக்கும். மத்தவன் நல்லா இருந்தா தன் வயித்திலே அடிச்சிக்கும்.' "கங்கை கால்வாய் திட்டம்னு சொல்லாதீங்க சார் கேட்டு காது புளிச்சுப் போச்சு. தப்பித்தவறி காசிக்குப் போய் கங்கையைப் பார்த்தா எங்களுக்கு மரியாதையே வராது. எங்க ஊருக்கு வரேன் வரேன்னு சொல்லி ஏமாத்திக்கிட்டியான்னு எட்டி உதைக்கத்தான் தோணும்' 'கம்பராமாயணத்தை எடுத்து வச்சிக்கிட்டு, எத்தனை எடத்திலே ராமன் அப்படிங்கிற பேரு வந்திருக்கு அப்படின்னு ஒரு லிஸ்ட் எழுதிக் கொடுத்தேன்னா, நம்ப யுனிவர்சிட்டிலே டாக்டர் பட்டம் கொடுத்திடறாங்க" இப்படி சமூகத்தின் சகல விதமான போலித் தனங்களையும் ஊழல் போக்குகளையும் தோலுரித்துக் காட்டி விமர்சிக்கும் ஒரு முற்போக்குப் பாத்திரமாக வாத்தியார் வைத்தியலிங்கத்தை கோமல் உலவ விட்டிருக்கிறார். திரைப்படத்தில் அப்பாத்திரத்தை ஏற்று நடித்த ராமன் வாத்தியார் ராமன் என்ற பட்டம் பெற்றுவிட்டார்.