பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 15 "தேர்ந்தெடுப்பதற்கு உரிமை' என்ற பதத்தைத் தவறான பொருளில் பயன்படுத்துகின்றனர். தூக்குக் கயிறு, துளி விஷம், கட்டாரி இவற்றில் எது என்றாலும் அது மரணத்திற்குத்தான் என்னும்போது அது சுதந்திரமா? அது போன்றதுதான் தாய்மொழி வேண்டாத பாடமொழிச் சுதந்திரம், விரும்பி வேண்டிக் கேட்கின்ற மாணவர்களில் பெரும்பாலோர் பல்கலைக் கழகத் தேர்வுகளில் தவறுவது ஆங்கிலப் பாடத்தில்தான்! ஆங்கிலத்தின் தரம் இப்போது குறைந்துவிட்டது என்பார்கள் 다. ஜப்பானில் தாய்மொழிதான்....! ஆனால் கணித மேதை இராமனுசம் ஆங்கிலத்தின் தரம் குறையாதிருந்த அந்தக் காலத்தில் இடைநிலை வகுப்பில் (Inter) தவறியது ஆங்கிலத்தில்தான் காரணம் என்ன? இந்தப் பெருமக்கள் நினைப்பதைப்போல் மெக்காலே பெருமகன் ஆங்கிலக் கல்வியை, அறிவியல் அறிஞர்களை உற்பத்தி செய்வதற்காகப் புகுத்தவில்லை. அவன் தன் நிர்வாகத்திற்கு வேண்டிய எழுத்தர்களை உற்பத்தி செய்யப் புகுத்தினான்; அவ்வளவே! இதுவரை ஆங்கிலக் கல்வியால் எத்தனை அறிவியல் அறிஞர் களை இந்த நாட்டில் உருவாக்க முடிந்தது, ஒரு சி.வி.இராமனைத் தவிர. ஆனால் தாய்மொழி மூலம் கல்வி பயிலும் ஜப்பான் இலக்கியத்தில் நோபல் பரிசு பெறுகிறது. தொழில் துறையில் அமெரிக்காவுக்கு நிகராக விளங்கும் விதத்தில் அறிவியல் வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஜப்பான் மக்கள் ஆங்கிலத்தை மொழி என்ற அளவில் ஓரளவு அறிவார்கள். அவர்கள் தங்கள் தாய்மொழியைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இங்கிருந்து எக்ஸ்போ-70 கண்காட்சி காணச் சென்றவர்கள் டாக்சி டிரைவரிடம் தங்கள் ஆங்கிலம் செல்லுபடியாகாமல் வழிகாட்டியின் உதவியால் சுற்றுலா நடத்தியிருக்கின்றனர். நம் தாய்மொழியைக் கொலை செய்தாலும் வருந்த மாட்டோம். ஆங்கிலத்தைப் பிழையாக உச்சரித்துவிட்டால் நகைப்போம்.