பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 27 இந்திரனே குற்றவாளி என வியாக்கியானங்கள் தரும் படைப்பாளி களைக் காலை வாரிவிடுகிறது. ஆயிரம்தான் இந்திரன் தந்திரங்கள் செய்து முயன்றிருந்தாலும் அல்லது பலாத்காரம் செய்திருந்தாலும் அவளது சம்மதமின்றி நடந்திருக்காது. அவள் இந்திரன் செய்கை பற்றி கூக்குரலோ கூச்சலோ எழுப்பவில்லை. மோதிலால் நேரு தேசபக்தர் என்பதோடு புகழ்பெற்ற வழக்க றிஞரும் கூட. ஒரு முறை ஒரு கற்பழிப்பு வழக்கில் ஒரு பெரிய செல்வந்தரை விடுவிக்க நீதிபதியின் முன் ஒரு ஊசியை கையில் வைத்துக்கொண்டு கையில் வைத்திருந்த நூலை வாங்கி கோக்கச் சொன்னாராம், எதிர்தரப்பு வழக்கறிஞரை. 'இது என்ன பிரமாதம் என்று நூலைக் கோக்க வந்தபோது அந்த ஊசியை நூலுக்கு நேராக இருந்து வலம் இடம் மாறும்படி லேசாக நகர்த்திக் கொண்டாராம். எதிர்தரப்பு வழக்கறிஞரால் ஊசியில் நூலைக் கோக்க முடியவில்லை. மோதிலால் நேரு சொன்னராம், பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் சிறிதாவது இயங்காமல் முரண்டு பண்ணியிருந்தால் இது நடந்திருக்காது என்பதற்கு சாட்சியங்கள் உள்ளன. முரண்டு பண்ணியதற்கு சாட்சியம் இல்லையே என்று வாதிட்டு வென்றாராம். ஆக, அகலிகை சமூகத்தால் ஒப்புக்கொள்ளப்படாத பிற ஆடவருடன் கூடிய-அதே சமயம் தன் மனம் விரும்பிய செயலைச் செய்தாள். இது அன்றைய நிலையில் ஒப்புக்கொள்ளப்படக் கூடியதா? இப்படிப்பட்ட ஒரு பாத்திரத்திற்கு அகலிகை என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட இழிவைத்துடைப்பதற்காக என்று பல்வேறு படைப்புக்கள் உருவாக்கப்பட்டு வந்துள்ளன இவற்றுள் அகலிகைக் காகவே அசலாகப் படைக்கப்பட்டவை சில. அகலிகை கதை அவர்களின் படைப்புக்களின் ஊடாக இடம்பெறுகின்றன. அவற்றின் நோக்கம் அகலிகையை அபவாதத்திலிருந்து விடுவிப்பதே! எனினும் பூரண வெற்றியில்லை. கம்ப இராமயணம், வெள்ளகால் சுப்பிரமணிய முதலியாரின் அகலிகை வெண்பா, சதுசு யோகியின் அகல்யா புதுமைப் பித்தனின் 'சாபவிமோசனம், ஞானியின் 'கல்லிகை (புதுக் கவிதைக் குறுகாவியம்) விந்தனின் பாலும் பாவையும், வ.ராவின் கோதைத் தீவு' என்று கைலாசபதி சிலவற்றை சுட்டிக்காட்டி யுள்ளார். இவற்றைப் படைத்தவர்களின் நோக்கம் அகலிகைக்காக