பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 29 ஆய்வுகளின் படி ஆதிச்சமுதாயத்தில் பெண்ணே இனக் குழுவிற்குத் தலைமை ஏற்றிருந்தாள். குடும்பத்திலும் அப்படியே. ஆடவன் குடும்பத்தில் நிரந்தர உறுப்பினன் அல்லன். சொத்து தாய் வழியிலே சென்றடைந்தது. ஆனால் உற்பத்தி பெருகப் பெருக, உற்பத்தியில் உபரி ஏற்பட ஏற்பட ஆட்சி ஆடவர் கைக்கு மாறியது. அந்த நாள் முதல் ஏற்பட்ட வீழ்ச்சியில் பெண்களுக்கு அவர்கள் பிறப்பதற்கு முன்பே விலங்குகளைத் தயார் செய்ய ஏற்பாடு நடப்பது இயல்பாகிவிட்டது. பெண்ணே உயர்ந்தவள் என்று இருந்தபோது, பெண்டிர் பேரன்னை என வழிபடப்பட்டனர். ஆனால் அவர்களின் வீழ்ச்சியின் பின்னே, பேய், பேய்ச்சி என்று அழைக்கப்பட்டனர். குற்றுயிராக அவச் சாவைச் சந்திப்போர் பெண்கள் மட்டும்தானா? ஆடவர்கள் ஆண் பேய்களாக மாறுவதில்லையா? பெண்டிர் மட்டுமே பேய்களாக மாறுவது ஏன் வாடிக்கையானது? கோடங்கி தட்டும் பூசாரி பெண்களைத் தான் பேய் பிடித்ததாக அடித்து மிரட்டு கிறான். பெண்ணைத் தாய்த் தெய்வமாக வழிபட்டவர்கள் பெண்ணை பிணந்தின்னும் பெண் பேய்களாக இலக்கியங்களில் ஏன் எழுதினார்கள்? ஏன் ஆண் பேய்கள் பிணந்தின்னாதா? இவை யெல்லாம், பெண்களை வழிபடும் ஆளுமை நிலையிலிருந்து, மிரட்டுகிற வெறுப்புக்குரிய இழிந்த பிறவிகளாகக் காட்ட வழி வழி நடந்த சதியின் விளைவே. இவற்றைப் பற்றியெல்லாம் சரியான ஆய்வு செய்யப்படாமலே உள்ளது. பெண் என்னதான் வீட்டில் உழைத்தாலும் அது பணியாக ஏற்றுக் கொள்ளப்படாதாலும் வீட்டில் கணவனுக்காக குடும்பத்திற்காகப் பணி செய்யும் பெண்டிரை சுகவாசம் (Easy living) நடத்துபவர் என்றும் இல்லத்தரசி (House Wife) என்றும் பெயரிட்டு சம்பாத்தியம் செய்கிற ஆணுக்குள்ள மதிப்பு தருவதில்லை. அவளது உழைப்புக்கு ஒரு ஊதியத்தைக் கோரினால் கணவனின் சம்பாத்தியமே போதாது. மனைவி அலுவலகம் சென்று சம்பாதித்தாலும் ஆடவர்க்குள்ள உரிமை பெண்டிர்க்கு இல்லை. காரணம் பெண் சமுதாயப் படிகளிலே உயர்ந்த இடத்தில் இருந்து என்றோ இறக்கப்பட்டு விட்டாள். அந்த நிலையை எய்துவதற்கான பின்னணியில் அகலிகை கதைகளுக்கு வேர்களைத் தேடினால் பரிபாடல் துணிச்சல்மிக்க உணர்வுபூர்வ அகலிகையை உயிர்ப்பித்துக் காட்டுகிறது. 마